தமிழ்நாடு

இரு ஆண்டுகளாக சாலை விரிவாக்கம் பணிகள் முடக்கம்; பாதிப்பு ஏராளம்!

Added : நவ 10, 2021
Share
Advertisement
அன்னுார்: அன்னுார் வழித்தடத்தில் அறிவிக்கப்பட்ட சாலை விரிவாக்க பணிகள் இரண்டு ஆண்டுகளாக முடங்கியுள்ளதால் பொது மக்கள் நெரிசலால் அவதிப்படுகின்றனர்.கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலைக்கும், மேட்டுப்பாளையம்-அவிநாசி மாநில நெடுஞ்சாலைக்கும் மையமாக, அன்னுார் உள்ளது. அன்னுார் வட்டாரத்தில், 110 நுாற்பாலைகள், பவுண்டரி, ஸ்டீல் ரோலில் மில், விசைத்தறி என ஆயிரம் தொழில் நிறுவனங்கள்
 இரு ஆண்டுகளாக சாலை விரிவாக்கம் பணிகள் முடக்கம்; பாதிப்பு ஏராளம்!

அன்னுார்: அன்னுார் வழித்தடத்தில் அறிவிக்கப்பட்ட சாலை விரிவாக்க பணிகள் இரண்டு ஆண்டுகளாக முடங்கியுள்ளதால் பொது மக்கள் நெரிசலால் அவதிப்படுகின்றனர்.கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலைக்கும், மேட்டுப்பாளையம்-அவிநாசி மாநில நெடுஞ்சாலைக்கும் மையமாக, அன்னுார் உள்ளது. அன்னுார் வட்டாரத்தில், 110 நுாற்பாலைகள், பவுண்டரி, ஸ்டீல் ரோலில் மில், விசைத்தறி என ஆயிரம் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதனால், குடியிருப்புகள் அதிகரித்து வருவதுடன், தினமும், 25 ஆயிரம் வாகனங்கள் அன்னுாரை கடந்துசெல்கின்றன.பெருகிவரும் வாகனங்களுக்கு ஏற்ப சாலை வசதி செய்யப்படவில்லை. அன்னுார் நகரில், முகூர்த்த நாட்களில், வாகனங்கள், 3 கி.மீ., துாரம் வரை வரிசைகட்டி நின்று, 15 முதல் 20 நிமிடங்களுக்கு பிறகு நகரும் நிலையுள்ளது. இதற்கு தீர்வாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு புறவழிச்சாலை அறிவிக்கப்பட்டது.
இதன்படி, அன்னுார்-கோவை ரோட்டில், கரியாம்பாளையம் அருகே புறவழிச்சாலை துவங்கி, குமாரபாளையம், சொக்கம்பாளையம் வழியாக அவிநாசி ரோட்டில், சோமனூர் பிரிவில் இணையும்படி திட்டமிடப்பட்டது.அங்கிருந்து சாணாம்பாளையம் வழியாக சத்தி ரோட்டில் அய்யப்பரெட்டிபுதுாரில் இணையும்படி திட்டமிடப்பட்டது. இதற்காக கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, கையகப்படுத்தப்பட உள்ள நில உடமையாளர்களுக்கு நோட்டீஸ் தரப்பட்டது. அதன்பிறகு, இரண்டு ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் பணி முடங்கியுள்ளது. அதேபோல், கரூரில் இருந்து கோவை மாவட்டத்தில், சத்தி ரோட்டில் குன்னத்துாரில் இணைந்து மேட்டுப்பாளையம் ரோட்டில் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் முடிவடையும்படி, பசுமை சாலைக்கு மசக்கவுண்டன்செட்டிபாளையம், குன்னத்துார் ஊராட்சிகளில் 'சர்வே' செய்யப்பட்டது.ஆனால், அந்த பணியும் இரண்டு ஆண்டுகளாக முடங்கி கிடக்கின்றன. இத்துடன் ஆறுமாதங்களுக்கு முன்பு, கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மேற்கு புறவழிச்சாலை திட்டத்தை அறிவித்தது. இதற்காக ஆறு மாதங்களுக்கு முன் காரேகவுண்டன்பாளையம், ஒட்டர்பாளையம், அ.மேட்டுப்பாளையம், பசூர் ஆகிய ஊர்களில் அளவு கற்கள் நடப்பட்டன. விவசாய நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து பலர் அந்த அளவு கற்களை பிடுங்கி எறிந்துவிட்டனர். இதனால், மூன்று மாதங்களாக அப்பணியும் முடங்கிக்கிடக்கிறது.


தீர்வு காணுங்கள்!

அன்னுார் மக்கள் கூறுகையில்,'அன்னுார் நகரில் தீராத போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய, மாநில அரசுகள், முடங்கி கிடக்கும் புறவழிச்சாலை பணிகளை துவக்க வேண்டும். அன்னுார் நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மின் கம்பங்களை சாலையின் உள்புறமாக நகர்த்த வேண்டும். உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும். குளக்கரையில் சாலை அமைக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X