அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தலுக்கு தயாராக இருக்கணும் தி.மு.க.,வினருக்கு அறிவுரை

Added : நவ 10, 2021
Share
Advertisement
அன்னூர்: பேரூராட்சி தேர்தலுக்கு தயாராகும்படி, தி.மு.க.,வினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அன்னூர் பேரூராட்சி தி.மு.க.,வில், 15 கிளைகள் உள்ளன. இந்த கிளைகளின் செயலாளர்கள், பிரதிநிதிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் அன்னூரில் நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், நகர பொறுப்பாளர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தனர். வரும், 13, 14ம்

அன்னூர்: பேரூராட்சி தேர்தலுக்கு தயாராகும்படி, தி.மு.க.,வினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அன்னூர் பேரூராட்சி தி.மு.க.,வில், 15 கிளைகள் உள்ளன. இந்த கிளைகளின் செயலாளர்கள், பிரதிநிதிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் அன்னூரில் நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், நகர பொறுப்பாளர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தனர். வரும், 13, 14ம் தேதிகளில் இரண்டு நாட்களுக்கு, வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் நடக்கிறது. கிளை நிர்வாகிகள், தங்கள் பகுதியில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்டவை இருந்தால், வாக்காளர்களிடம் கூறி அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.விரைவில் பேரூராட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலுக்கு தயாராக பணியாற்ற வேண்டும் என, கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரகமத்துல்லா, முன்னாள் ஒன்றிய அவை தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X