தமிழ் அமுதம் பருக வாங்க! தமிழ்ச் சங்கம் அழைப்பு

Added : நவ 10, 2021
Share
Advertisement
அன்னூர்: நல்லகவுண்டன்பாளையம் பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் வரும், 14ம் தேதி முப்பெரும் விழா நடக்கிறது.கவையன்புத்துார் தமிழ்ச் சங்கம், அச்சக குடியிருப்பு தவத்திரு சாந்தலிங்க அடிகளார் அறவழி பேரவை மற்றும் கோவை எய்ம் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, நல்லகவுண்டன்பாளையம், பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் வரும், 14ம் தேதி முப்பெரும் விழாவை நடத்துகிறது.காலை 10:00 மணிக்கு நடக்கும்

அன்னூர்: நல்லகவுண்டன்பாளையம் பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் வரும், 14ம் தேதி முப்பெரும் விழா நடக்கிறது.கவையன்புத்துார் தமிழ்ச் சங்கம், அச்சக குடியிருப்பு தவத்திரு சாந்தலிங்க அடிகளார் அறவழி பேரவை மற்றும் கோவை எய்ம் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, நல்லகவுண்டன்பாளையம், பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் வரும், 14ம் தேதி முப்பெரும் விழாவை நடத்துகிறது.காலை 10:00 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில், கவிஞர்கள் அழ வள்ளியப்பா, வீரமாமுனிவர், சுரதா ஆகியோரின் பிறந்தநாள் விழா மற்றும் குழந்தைகள் விழாவும் இடம்பெறுகிறது. ஆசிரம தலைவர் குருஜி சிவகுமார் தலைமையில், புலவர் தெய்வசிகாமணி, தமிழாசிரியர் முனியாண்டி ஆகியோர் சிரப்புரை ஆற்றுகின்றனர். உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் அன்வர் பாட்சா தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது. தமிழ் அமுதம் பருக அனைவரையும் வரவேற்பதாக, தமிழ்ச் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X