அன்னூர்: நல்லகவுண்டன்பாளையம் பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் வரும், 14ம் தேதி முப்பெரும் விழா நடக்கிறது.கவையன்புத்துார் தமிழ்ச் சங்கம், அச்சக குடியிருப்பு தவத்திரு சாந்தலிங்க அடிகளார் அறவழி பேரவை மற்றும் கோவை எய்ம் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, நல்லகவுண்டன்பாளையம், பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் வரும், 14ம் தேதி முப்பெரும் விழாவை நடத்துகிறது.காலை 10:00 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில், கவிஞர்கள் அழ வள்ளியப்பா, வீரமாமுனிவர், சுரதா ஆகியோரின் பிறந்தநாள் விழா மற்றும் குழந்தைகள் விழாவும் இடம்பெறுகிறது. ஆசிரம தலைவர் குருஜி சிவகுமார் தலைமையில், புலவர் தெய்வசிகாமணி, தமிழாசிரியர் முனியாண்டி ஆகியோர் சிரப்புரை ஆற்றுகின்றனர். உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் அன்வர் பாட்சா தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது. தமிழ் அமுதம் பருக அனைவரையும் வரவேற்பதாக, தமிழ்ச் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement