பொது செய்தி

தமிழ்நாடு

சென்னியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
சூலுார்: பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.சூலுார் அடுத்த பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர் கோவில் பழமையானது. இங்கு, கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல திருப்பணிகள் நடந்தன. கடந்த, 8ம் தேதி மாலை விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி

சூலுார்: பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.சூலுார் அடுத்த பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர் கோவில் பழமையானது. இங்கு, கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல திருப்பணிகள் நடந்தன. கடந்த, 8ம் தேதி மாலை விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம் நடந்தன. இரவு அஷ்ட பந்தன மருந்திடல், கோபுர கலசம் நிறுவுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.நேற்று முன்தினம் மாலை புனித நீர் கலசங்கள் நிறுவப்பட்டு, முதல்கால ஹோமம் நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை முடிவுற்று, மேள, தாளத்துடன் கலசங்கள் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு, சென்னியாண்டவ சுவாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தச தானம், தச தரிசனம் மற்றும் மகாதீபாராதனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X