கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஐகோர்ட் வளாகத்துக்குள் வக்கீல்களுக்கு அனுமதி

Added : நவ 10, 2021
Share
Advertisement
சென்னை:சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள், 15ம் தேதி முதல் வழக்கறிஞர்கள், குமாஸ்தாக்கள் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஆன்லைனில் நடக்கிறது. அரசு வழக்கறிஞர்கள் மட்டும், நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகின்றனர்.15ம் தேதிநேரடி விசாரணை கோரும் வழக்கறிஞர்களும், நீதிபதிகள் அனுமதிக்கும் பட்சத்தில் ஆஜராகின்றனர்.

சென்னை:சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள், 15ம் தேதி முதல் வழக்கறிஞர்கள், குமாஸ்தாக்கள் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஆன்லைனில் நடக்கிறது. அரசு வழக்கறிஞர்கள் மட்டும், நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகின்றனர்.15ம் தேதிநேரடி விசாரணை கோரும் வழக்கறிஞர்களும், நீதிபதிகள் அனுமதிக்கும் பட்சத்தில் ஆஜராகின்றனர். மற்றபடி, வழக்கறிஞர்கள், குமாஸ்தாக்களை வளாகத்துக்குள் அனுமதிக்கவில்லை.

இந்த கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் வழக்கறிஞர்கள், பதிவு செய்யப்பட்ட குமாஸ்தாக்கள் வருவதற்கு, 15ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு நடைமுறை, கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி, இவர்கள் அனுமதிக்கப்படுவர்.வழக்கு விசாரணைக்கு தேவைப்படும் பட்சத்தில், நீதிபதிகள் அனுமதித்தால் ஒழிய, வழக்கு தொடுத்தவர்கள், தானாக வழக்கில் ஆஜராவோருக்கு விதிக்கப்பட்ட தடை, மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும்.


கேன்டீன்கள்

சென்னை உயர் நீதிமன்றத்தில், 'ஆன்லைன்' வாயிலாகவோ, நேரடியாகவோ வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கும். வழக்கறிஞர் சங்கங்கள், நுாலகங்கள் திறக்கப்படும். கேன்டீன்கள் திறந்திருக்கும். கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி, வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படுவர்.இதை, உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X