பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி முகாம் 38 பேருக்கு செலுத்தப்பட்டது

Added : நவ 10, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்: காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கிராமங்கள் தோறும் சென்று, கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ளது.காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், 17 ஊராட்சிகளில், 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பொதுமக்களுக்கு, 100 சதவீதம் கொரோனா தடுப்பு ஊசி போட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதற்காக நடமாடும் கொரோனா தடுப்பூசி மருத்துவ முகாமை துவக்கி

மேட்டுப்பாளையம்: காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கிராமங்கள் தோறும் சென்று, கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ளது.காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், 17 ஊராட்சிகளில், 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பொதுமக்களுக்கு, 100 சதவீதம் கொரோனா தடுப்பு ஊசி போட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதற்காக நடமாடும் கொரோனா தடுப்பூசி மருத்துவ முகாமை துவக்கி உள்ளது.அந்தந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசி, போடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காரமடை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சுதாகர் தலைமையில், சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம் மேற்பார்வையில், கிராமங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
நேற்று சிக்காரம்பாளையத்தில், டாக்டர் மனோஜ்குமார் தலைமையில், தடுப்பூசி முகாம் நடந்தது. இதில், சுகாதார ஆய்வாளர் சியாமளா, செவிலியர் விஜயலட்சுமி ஆகியோர் முகாமிற்கு வந்தவர்களுக்கு பரிசோதனை செய்து, ஊசி போட்டனர். முகாமில், 38 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X