பாதிக்கப்பட்டவர் வீடுகளில் எம்.எல்.ஏ., விசிட்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பாதிக்கப்பட்டவர் வீடுகளில் எம்.எல்.ஏ., 'விசிட்'

Added : நவ 10, 2021
Share
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., நேரில் சென்று ஆறுதல் கூறினார்.இடிகரை பகுதியில் பெய்த கனமழை காரணமாக, மணியகாரன்பாளையத்தில் இருந்து ஜெம் கார்டன், மகாலட்சுமி நகர் பகுதிக்கு செல்லும் சாலையில் தரைப்பாலம் சேதமானது. அந்த வழியாக பைக்கில் சென்ற வாலிபர், காரில் சென்ற தம்பதியினர் ஆகியோர்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., நேரில் சென்று ஆறுதல் கூறினார்.இடிகரை பகுதியில் பெய்த கனமழை காரணமாக, மணியகாரன்பாளையத்தில் இருந்து ஜெம் கார்டன், மகாலட்சுமி நகர் பகுதிக்கு செல்லும் சாலையில் தரைப்பாலம் சேதமானது. அந்த வழியாக பைக்கில் சென்ற வாலிபர், காரில் சென்ற தம்பதியினர் ஆகியோர் பள்ளத்தில் சிக்கி, உயிர் தப்பினர். பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு எம்.எல்.ஏ., அருண்குமார் நேரில் சென்று ஆறுதல் கூறினார். துண்டான சாலையை உடனடியாக சீரமைக்க, இடிகரை பேரூராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், கவுண்டம்பாளையம் சங்கிலி கோனார் தோட்டம், ராஜலட்சுமி காலனி, வித்யா காலனி, எம்.ஜி.ஆர்., நகர், அரவிந்த் நகர் மற்றும் சங்கனுார் பள்ளத்தின் ஓரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டார். நிகழ்ச்சியில், அ.தி.மு.க., நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X