சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிரம்பாத ஏரிகள்: ஆக்கிரமிப்பால் சிக்கல்

Added : நவ 10, 2021
Share
Advertisement
சென்னை:நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் அடைப்புகள் காரணமாக, நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல ஏரிகள் நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் மாநிலம் முழுதும், 90 அணைகள், 14 ஆயிரத்து 138 ஏரிகள் உள்ளன. இதில், 90 அணை களில் 200 டி.எம்.சி., நீர் நிரம்பியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பின் துவங்கிய வடகிழக்கு பருவமழை, பல மாவட்டங்களில்

சென்னை:நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் அடைப்புகள் காரணமாக, நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல ஏரிகள் நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் மாநிலம் முழுதும், 90 அணைகள், 14 ஆயிரத்து 138 ஏரிகள் உள்ளன. இதில், 90 அணை களில் 200 டி.எம்.சி., நீர் நிரம்பியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பின் துவங்கிய வடகிழக்கு பருவமழை, பல மாவட்டங்களில் கொட்டி தீர்க்கிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில், சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பல மாவட்டங்களில் பயிர்களை மழை நீர் மூழ்கடித்து உள்ளது. இருப்பினும், நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 3,954 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவு நிரம்பியுள்ளன. இதுமட்டுமின்றி, 2,874 ஏரிகள் 99 சதவீதம்; 2,433 ஏரிகள் 75 சதவீதம்; 2,485 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன.மீதமுள்ளவற்றில், 2,047 ஏரிகளில், 25 சதவீதத்திற்கு குறைவாக நீர் நிரம்பியுள்ளது.

அதே நேரத்தில், 345 ஏரிகளில் ஒரு சொட்டு நீர் கூட வரவில்லை.இதில், தர்மபுரி மாவட்டத்தில் 63, திருநெல்வேலி மற்றும் நாமக்கல்லில் தலா 42, விருதுநகரில் 32, கிருஷ்ணகிரியில் 26, சேலத்தில் 25, மதுரையில் 22, தேனியில் 21, ஈரோட்டில் 12, கன்னியாகுமரியில் 11 ஏரிகளும், ஒரு சொட்டு நீர் கூட வராத ஏரிகளில் அடக்கம்.

முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பல லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட ஏரிகளும், இந்த பட்டியலில் உள்ளன. நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், அடைப்புகள் காரணமாக, ஏரிகளுக்கு செல்ல வேண்டிய நீர், குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் தேங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X