அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நெல்லையில் டெங்குவுக்கு பிரத்யேக ஆராய்ச்சி மையம்?'

Added : நவ 10, 2021
Share
Advertisement
சென்னை:''திருநெல்வேலி மாவட்டத்தில், டெங்கு காய்ச்சலுக்கான பிரத்யேக ஆராய்ச்சி மையம் அமைக்க, மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்,'' என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை, அயப்பாக்கத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்த பின் அவர் அளித்த பேட்டி:வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருப்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி
 'நெல்லையில் டெங்குவுக்கு  பிரத்யேக ஆராய்ச்சி மையம்?'

சென்னை:''திருநெல்வேலி மாவட்டத்தில், டெங்கு காய்ச்சலுக்கான பிரத்யேக ஆராய்ச்சி மையம் அமைக்க, மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்,'' என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை, அயப்பாக்கத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்த பின் அவர் அளித்த பேட்டி:வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருப்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மூன்று நாட்களில் மாநிலம் முழுதும், 1,858 இடங்களில் மருத்துவ முகாம்கள்; 965 நடமாடும் மருத்துவ முகாம்கள் வாயிலாக, 74 ஆயிரத்து 283 பேர் பயன் அடைந்துள்ளனர். இம்மாதத்திற்குள், 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி போட்டு விடுவது என்ற, இலக்கை நோக்கி பயணிக்கிறோம்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தாலும், வரும் 14ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்.டெங்கு காய்ச்சலால் நெல்லை, தென்காசி மக்கள் அதிகளவில் பாதிக்கப் படுவதால், அங்கு டெங்குவுக்கான பிரத்யேக ஆராய்ச்சி மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

மழைக்காலத்துக்கான சிறப்பு சிகிச்சை அளிக்க, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. 108 ஆம்புலன்ஸ் சேவையும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X