பொது செய்தி

தமிழ்நாடு

வேலைக்கு பதிந்தோர் 72.20 லட்சமாக உயர்வு

Added : நவ 10, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில், வேலைக்காக பதிவு செய்து உள்ளோர் எண்ணிக்கை 72.20 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டை விட 12.70 லட்சம் அதிகம்.தமிழகத்தில் அரசு வேலை பெற விரும்புவோர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்தாண்டு பிப்ரவரி 28 நிலவரப்படி, பதிவு செய்தோர் எண்ணிக்கை 63.63 லட்சமாக இருந்தது. கடந்த செப்., 30 நிலவரப்படி, தமிழகத்தில்

சென்னை:தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில், வேலைக்காக பதிவு செய்து உள்ளோர் எண்ணிக்கை 72.20 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டை விட 12.70 லட்சம் அதிகம்.

தமிழகத்தில் அரசு வேலை பெற விரும்புவோர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்தாண்டு பிப்ரவரி 28 நிலவரப்படி, பதிவு செய்தோர் எண்ணிக்கை 63.63 லட்சமாக இருந்தது. கடந்த செப்., 30 நிலவரப்படி, தமிழகத்தில் 33.81 லட்சம் ஆண்கள்; 38.38 லட்சம் பெண்கள்; 224 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 72.20 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

இது கடந்த ஆண்டை விட, 12.70 லட்சம் அதிகம். தற்போது வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரில், 12.57 லட்சம் பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். 19 முதல் 23 வயது வரையுள்ளவர்கள் 19.52 லட்சம்; 24 முதல் 35 வயது வரையிலானவர்கள், 26.88 லட்சம்; 36 முதல் 57 வயது வரை, 1.31 லட்சம்; 58 வயதுக்கு மேல் 11 ஆயிரத்து 387 பேர் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X