தேர்தல் முடிவில் குளறுபடி விசாரிக்க கலெக்டருக்கு உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் முடிவில் குளறுபடி விசாரிக்க கலெக்டருக்கு உத்தரவு

Added : நவ 10, 2021
Share
சென்னை:கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்நாடு கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தல் முடிவு அறிவிப்பில் உள்ள குளறுபடி குறித்து, கலெக்டர் விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்தில் உள்ள, இந்நாடு கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜெயக்கொடி, வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

சென்னை:கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்நாடு கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தல் முடிவு அறிவிப்பில் உள்ள குளறுபடி குறித்து, கலெக்டர் விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்தில் உள்ள, இந்நாடு கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜெயக்கொடி, வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. மறுநாள், விஜயா என்பவர் வெற்றி பெற்றதாக தெரிவித்தனர்.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயக்கொடி வழக்கு தொடர்ந்தார். மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் சித்ரா சம்பத், வழக்கறிஞர் கமலநாதன் ஆஜராகினர். மனுதாரர் வெற்றி பெற்றதாக அறிவித்து,

தேர்தல் அதிகாரி கையெழுத்திட்டதற்கான ஆவணம், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது.இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.தேர்தலில் வெற்றி பெற்றதாக எவரும் உரிமை கோரக்கூடாது என்றும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X