தமிழ்நாடு

'அலர்ட்டா' இருங்க! மக்களுக்கு சொல்கிறார் கலெக்டர்

Updated : நவ 11, 2021 | Added : நவ 10, 2021
Share
Advertisement
லீவு அறிவிப்பில் கோட்டை விட்டார்... பள்ளிக்குழந்தைகளை அலைய விட்டார்கோவை: கோவைக்கு 'ஆரஞ்ச் அலர்ட்' தரப்பட்டுள்ள நிலையில், நேற்று காலையில் பள்ளிகள் திறந்த பின், கலெக்டரால் விடுமுறை அறிவிக்கப்பட்டது, மக்களிடம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில், 20 செ.மீ., வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், 'ஆரஞ்ச் அலர்ட்'
 'அலர்ட்டா' இருங்க!  மக்களுக்கு சொல்கிறார் கலெக்டர்

லீவு அறிவிப்பில் கோட்டை விட்டார்... பள்ளிக்குழந்தைகளை அலைய விட்டார்
கோவை: கோவைக்கு 'ஆரஞ்ச் அலர்ட்' தரப்பட்டுள்ள நிலையில், நேற்று காலையில் பள்ளிகள் திறந்த பின், கலெக்டரால் விடுமுறை அறிவிக்கப்பட்டது, மக்களிடம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில், 20 செ.மீ., வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், 'ஆரஞ்ச் அலர்ட்' கொடுக்கப்பட்டது.பெரும்பாலான பள்ளிகள், காலை 8:30 மணிக்குள் துவங்கி விடுகின்றன. நேற்று மாணவர்கள் முழுமையாக வந்து சேர்ந்த நிலையில், மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டது.காலை 8:22 மணிக்குதான், கலெக்டர் சமீரன் தகவல் வெளியிட்டு இருந்தார்.

அதன்பின், பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களுக்குத் தகவல் சென்று, பள்ளிகளுக்கு அந்த தகவல் போய்ச் சேருவதற்குள், பல பள்ளிகளில் வகுப்புகள் துவங்கிவிட்டன.
அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள் மட்டும், கலெக்டர் அறிவிப்பின் காரணமாக, விடுமுறையை அறிவித்து, மாணவர்களைத் திருப்பி அனுப்பின. தனியார் பள்ளிகளில் வகுப்புகள் துவங்கி விட்டபின், மாணவர்களுக்கான வாட்ஸ்ஆப் குரூப்களிலும், பெற்றோர் அலைபேசிகளிலும் தகவல் பகிரப்பட்டு, மதியத்துடன் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.பெற்றோர் பலர், தங்கள் பணிக்குச் சென்று விட்டதால், மதியம் வந்து குழந்தைகளை அழைத்துச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.
கலெக்டர் சமீரனிடம் கேட்டதற்கு, ''முன் கூட்டியே அறிவித்திருக்க வேண்டும். ஆனால் கோவைக்கு 'ஆரஞ்ச் அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ள தகவல், எனக்குக் காலையில்தான் முறைப்படி கிடைத்தது. தகவல் கிடைத்த, 17 நிமிடங்களில், விடுமுறை அறிவித்து விட்டேன். நாளைதான் (நவ.,11) கோவைக்கு 'ஆரஞ்ச் அலர்ட்' தரப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று, 'கிளவுட் பர்ஸ்ட்' (மேகவெடிப்பு) ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறியதால்தான், இன்றே விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டது,'' என்றார்.
கோவைக்கு 'ஆரஞ்ச் அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ள தகவல், நேற்று முன்தினம் இரவே வெளியிடப்பட்டு, நேற்று காலை நாளிதழ்களிலேயே வெளியாகியிருந்தது.குறிப்பாக, நமது நாளிதழில், 'ரெட் அலர்ட்' என்ற தலைப்பில், பேனர் செய்தியாகவே வெளியிடப்பட்டிருந்தது. அதிலும் கோவைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது.நேற்று காலையில்தான், தனக்கு இந்தத் தகவல் கிடைத்ததாக கோவை கலெக்டர் சமீரன் கூறுவது, தமிழக அரசின் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் இடையே தகவல் தொடர்பு குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X