பொது செய்தி

தமிழ்நாடு

துபாய் செல்லும் விமானங்கள் ரத்து

Added : நவ 10, 2021
Share
Advertisement
சென்னை:வானிலை நிலவரம் காரணமாக, இன்று துபாய் செல்லும் மற்றும் துபாயிலிருந்து சென்னை வரும் விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து இன்று அதிகாலை 3:30 மணி மற்றும் 9:45க்கு துபாய் செல்லும் விமானங்களும்; அதிகாலை 3:00 மணிக்கு சார்ஜா செல்லும் விமானமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.அதேபோல, துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து வரும் விமானங்களும் ரத்து

சென்னை:வானிலை நிலவரம் காரணமாக, இன்று துபாய் செல்லும் மற்றும் துபாயிலிருந்து சென்னை வரும் விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

சென்னையில் இருந்து இன்று அதிகாலை 3:30 மணி மற்றும் 9:45க்கு துபாய் செல்லும் விமானங்களும்; அதிகாலை 3:00 மணிக்கு சார்ஜா செல்லும் விமானமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.அதேபோல, துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

லண்டனில் இருந்து இன்று காலை 5:35க்கு சென்னை வந்து, காலை 7:35 மணிக்கு மீண்டும் லண்டன் திரும்பி செல்லும் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம், காலை 11:30க்கு சென்னை வந்து, 1:30 மணிக்கு மேல் சென்னையிலிருந்து புறப்படும்.துபாயில் இருந்து நாளை காலை 4:25க்கு சென்னை வந்து, 5:25 மணிக்கு துபாய் புறப்படும் பிளை துபாய் விமானம், மாலை 3:25க்கு சென்னை வந்து, 4:25 மணிக்கு புறப்படும் என்று, சென்னை விமான நிலையம் அறிவித்து உள்ளது.


பயணியருக்கு பாதுகாப்பு

விமான நிலையத்திற்கு வரும் பயணியருக்கு, எந்த இடையூறுகளும் ஏற்படாத வகையில், சென்னை விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.பயணியருக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க, கூடுதல் ஊழியர்களை நியமிக்க, விமான நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப உணவு பொருட்களை இருப்பு வைக்க, விமான நிலையத்தில் உள்ள கடைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பயணியருக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. விமான சேவைகள் சுமூகமாகவும், பாதுகாப்பாக செயல்படவும், அடையாறு ஆற்றில் ஓடு நதியின் அளவை தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X