3.70 லட்சம் கோடி ரூபாயை இழந்தார் எலான் மஸ்க்

Updated : நவ 10, 2021 | Added : நவ 10, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி : 'டெஸ்லா' நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க், இரண்டே நாட்களில் கிட்டத்தட்ட 3.70 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளார். 'புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ்' வரலாற்றில், இரண்டே நாட்களில் இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்த முதல் நபராகி இருக்கிறார், எலான் மஸ்க். இதற்கு முன் 'அமேசான்' நிறுவனர் ஜெப் பெசோஸ், தன்னுடைய மனைவி மெக்கன்சி ஸ்காட்டை 2019ல் விவாகரத்து செய்தபோது,
3.70 லட்சம் கோடி ரூபாயை இழந்தார் எலான் மஸ்க்

புதுடில்லி : 'டெஸ்லா' நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க், இரண்டே நாட்களில் கிட்டத்தட்ட 3.70 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளார். 'புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ்' வரலாற்றில், இரண்டே நாட்களில் இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்த முதல் நபராகி இருக்கிறார், எலான் மஸ்க்.
இதற்கு முன் 'அமேசான்' நிறுவனர் ஜெப் பெசோஸ், தன்னுடைய மனைவி மெக்கன்சி ஸ்காட்டை 2019ல் விவாகரத்து செய்தபோது, கிட்டத்தட்ட 2.66 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தார். இப்போது அதைவிட அதிக இழப்பை எலான் மஸ்க்
சந்தித்துள்ளார்.


latest tamil news




எலான் மஸ்க், தன்னுடைய சொத்து மதிப்பில் இவ்வளவு பெரிய தொகையை இழக்க காரணமாக இருந்தது, டுவிட்டரில் அவர் கேட்ட கேள்வி ஒன்று தான்.
கடந்த வார இறுதியில், தன்னுடைய டுவிட்டரில், டெஸ்லா நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்கலாமா என தன்னை பின்தொடர்பவர்களிடம் கேட்டிருந்தார், எலான் மஸ்க்.
இதற்கிடையே, எலான் மஸ்கின் இந்த டுவிட்டர் வாக்கெடுப்புக்கு முன்னதாக, அவரது சகோதரர் கிம்பல் தன்னுடைய பங்குகளை விற்றதும் சந்தையில், டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் விலையில் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, தன்னுடைய தனிப்பட்ட கடனை அடைக்கவே, பங்குகளை எலான் மஸ்க் விற்க விரும்புகிறார் என்றும் செய்திகள் வந்தன.இது போன்ற காரணங்களால், டெஸ்லா நிறுவன பங்குகள் விலை சரிந்து, பெரும் இழப்பை சந்தித்துள்ளார், எலான் மஸ்க்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-நவ-202118:46:16 IST Report Abuse
சம்பத் குமார் 1). பாவம் எவ்வளவு சிரமப்பட்டு சம்பாதித்து இருப்பார்.2). முதல்தர பிஸினஸ் செய்பவர் அதனால் நேர்மையாக தான் சம்பாதித்து இருப்பார். 3). சனி ராகு கேது திசையில் இருப்பார். குருவும் வக்கிரம் பெற்று இருந்திருப்பார். 4). நான்கு பேர் கூட்டணி இப்படி அவர் மூளையை மயக்கி இந்த காரியத்தை டுவிட்டர் மற்றும் அவரது தம்பி உருவில் செய்து விட்டது.5). போகட்டும் குரு பெயர்ச்சி வருகிறது. 6). விட்டத்தை சம்பாதித்து விடுவார் ஆனால் இரண்டு விஷயங்கள் அவரிடம் இருந்தால்.7). முதலாவது தன்னம்பிக்கை.8). இராண்டாவது தொழில் நாணயம்.9). இப்பொழுது அவருக்கு தேவைப்படுவது யோகா மட்டுமே. நன்றி வணக்கம் ஐயா.
Rate this:
Cancel
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
11-நவ-202109:18:25 IST Report Abuse
Ramaraj P இது ஒரு ட்ரிக் விலை குறைப்பு செய்து குறைந்த விலையில் வாங்கி பிறகு ட்ரிக் செய்து அல்ல அதிக விலைக்கு விற்பார். டெஸ்லா பங்கு நல்ல பங்குதான்.
Rate this:
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
11-நவ-202111:30:51 IST Report Abuse
Ramalingam Shanmugamரிலையன்ஸ் இப்படித்தான் பண்ணுவார்...
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
11-நவ-202105:39:22 IST Report Abuse
N Annamalai நுணலும் தன் வாயால் கெடும் .ஆனால் இவர் கேட்டது எண்ணூறு கோடி இருந்தால் உலக மக்களின் பசியை தீர்க்கலாம் என்று ஐ நா சையில் இருந்து ஒரு அதிகாரியை கேட்டார் .அதன் விளைவு தான் இது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X