எங்கே போனார் கிராம நிர்வாக அலுவலர்? கணபதி வரை அலைந்து மக்கள் சோர்வு

Added : நவ 10, 2021
Share
Advertisement
கோவை: கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்துக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் கிராம நிர்வாக அலுவலர் பல மாதங்களாக நீண்ட விடுப்பில் இருப்பதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்துக்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம், கிருஷ்ணராயபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளது.இந்த அலுவலகத்தில் பணியாற்றி வந்த கிராம நிர்வாக அலுவலர் கடந்த நான்கு



கோவை: கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்துக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் கிராம நிர்வாக அலுவலர் பல மாதங்களாக நீண்ட விடுப்பில் இருப்பதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்துக்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம், கிருஷ்ணராயபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளது.இந்த அலுவலகத்தில் பணியாற்றி வந்த கிராம நிர்வாக அலுவலர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் விடுப்பில் சென்றார். அன்றிலிருந்து கிராம நிர்வாக அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. இந்த கிராம நிர்வாக அலுவலகத்தின் பணிகளை, கூடுதல் பொறுப்பாக கணபதி பகுதி கிராம நிர்வாக அலுவலர் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.இதுதொடர்பாக, கிருஷ்ணராயபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தின் முகப்பில், 'கிராம நிர்வாக அலுவலர் விடுப்பில் உள்ளதால், கூடுதல் பொறுப்பாக கணபதி மேற்கு கிராம நிர்வாக அலுவலர் கவனிப்பார். பொதுமக்கள் மதியம், 2:00 முதல், 4:00 மணி வரை வந்து அலுவலரை சந்திக்கலாம்' என, நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.இதனால் பல மாதங்களாக பாப்பநாயக்கன்பாளையம் பகுதிக்கு பதிலாக, கணபதிக்கு பொதுமக்கள் அலைக்கழிந்து வருகின்றனர்.மக்கள் கூறுகையில், 'பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் நிறைந்துள்ளன. இதனால் பொதுமக்களின் தேவைகள் அதிகம். இங்குள்ள கிராம நிர்வாக அலுவலக அலுவலர் பல மாதங்களாக விடுப்பில் இருப்பதால், கணபதிக்கு சென்று வருகிறோம். அலுவலகத்தில் ஒட்டியுள்ள நோட்டீசில், கணபதி கிராம அலுவலரை இந்த அலுவலகத்தில் சந்திக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் தான் தினமும் கணபதிக்கு அலைந்து வருகிறோம். மக்கள் பிரச்னைகளை புரிந்து கொண்டு விரைவாக, இங்கு கிராம நிர்வாக அலுவலரை நியமிக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X