அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஏற்கனவே நொந்து போய் இருக்காங்க ஜனங்க ரயில் கட்டணத்தையும் உயர்த்தினால் எப்படிங்க? கோவை எம்.பி., கண்டனம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
கோவை: கோவையில் இருந்து பழனி வரை செல்லும் பயணிகள் ரயில் கட்டண உயர்வுக்கு, கோவை எம்.பி., கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து, கோவை எம்.பி., நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாவட்டம் கல்வி நிறுவனங்கள், சிறுகுறு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் வர்த்தக தலைநகராக உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கோவை மாவட்டத்திற்குள் வந்து செல்கின்றனர்.இதன் காரணமாக அதிக



கோவை: கோவையில் இருந்து பழனி வரை செல்லும் பயணிகள் ரயில் கட்டண உயர்வுக்கு, கோவை எம்.பி., கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து, கோவை எம்.பி., நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாவட்டம் கல்வி நிறுவனங்கள், சிறுகுறு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் வர்த்தக தலைநகராக உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கோவை மாவட்டத்திற்குள் வந்து செல்கின்றனர்.இதன் காரணமாக அதிக வருவாயை ரயில்வே துறை ஈட்டி வருகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக பல ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில், தற்போது அடுத்தடுத்து ரயில்கள் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இயக்கப்படுகிறது.தற்போது கோவை -- பழனிக்கு பயணிகள் ரயில் சேவை துவக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பயண கட்டணத்தை 10 ரூபாயில் இருந்து, 30 ரூபாயாக உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.இது, ஏற்கனவே கொரோனா பாதிப்பால் வேலையின்மை, வருவாய் இழப்பு போன்ற துயரத்தில் உள்ள மக்களை வெகுவாக பாதிக்கும்.உடனடியாக இந்த கட்டண உயர்வை, ரயில்வே நிர்வாகம் திரும்ப பெற்று முந்தைய கட்டணத்தையே நிர்ணயிக்க வேண்டும். அனைத்து ரயில் சேவைகளையும் விரைந்து இயக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X