பைனலுக்கு முன்னேறியது நியூசிலாந்து: இங்கிலாந்து அணி ஏமாற்றம்

Updated : நவ 11, 2021 | Added : நவ 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அபுதாபி: இங்கிலாந்துக்கு எதிரான 'டி-20' உலக கோப்பை அரையிறுதியில் டேரில் மிட்சல் அரைசதம் விளாச, நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.எமிரேட்சில், ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 7வது சீசன் நடக்கிறது. அபுதாபியில் நடந்த முதல் அரையிறுதியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.


அபுதாபி: இங்கிலாந்துக்கு எதிரான 'டி-20' உலக கோப்பை அரையிறுதியில் டேரில் மிட்சல் அரைசதம் விளாச, நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.



latest tamil news




எமிரேட்சில், ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 7வது சீசன் நடக்கிறது. அபுதாபியில் நடந்த முதல் அரையிறுதியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. இங்கிலாந்து அணியில் காயத்தால் விலகிய ஜேசன் ராய்க்கு பதிலாக சாம் பில்லிங்ஸ் இடம் பிடித்தார். 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

நிதான துவக்கம்: இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி நிதான துவக்கம் தந்தது. முதல் மூன்று ஓவரில் 13 ரன் மட்டுமே எடுத்திருந்தது. பின் எழுச்சி கண்ட பட்லர், பவுல்ட் வீசிய 4வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடிக்க, 16 ரன் கிடைத்தன. முதல் விக்கெட்டுக்கு 37 ரன் சேர்த்த போது ஆடம் மில்னே 'வேகத்தில்' பேர்ஸ்டோவ் (13) வெளியேறினார். சான்ட்னர் பந்தில் ஒரு பவுண்டரி அடித்த பட்லர் (29), இஷ் சோதி 'சுழலில்' சிக்கினார்.

மலான் அபாரம்: பின் இணைந்த டேவிட் மலான், மொயீன் அலி ஜோடி, நியூசிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. இஷ் சோதி, நீஷம் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த மலான், பிலிப்ஸ் வீசிய 11வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த மொயீன், இஷ் சோதி, பவுல்ட் பந்தில் தலா ஒரு பவுண்டரி விளாசினார். சவுத்தீ வீசிய 16வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய மலான் (41), அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.

மொயீன் அசத்தல்: பொறுப்பாக ஆடிய மொயீன், இஷ் சோதி, மில்னே பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார். மில்னே பந்தை சிக்சருக்கு அனுப்பிய லிவிங்ஸ்டன், பவுல்ட் பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். நீஷம் வீசிய கடைசி ஓவரில் லிவிங்ஸ்டன் (17) அவுட்டானார். நீஷம் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மொயீன் 'டி-20' உலக கோப்பை அரங்கில் தனது முதல் அரைசதமடித்தார்.


latest tamil news



இங்கிலாந்து அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 166 ரன் எடுத்தது. மொயீன் (51), இயான் மார்கன் (4) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் சவுத்தீ, மில்னே, இஷ் சோதி, நீஷம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

மிட்சல் விளாசல்: சவாலான இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டில் (4), கேப்டன் வில்லியம்சன் (5) ஏமாற்றினர். கன்வே (46) நம்பிக்கை தந்தார். பிலிப்ஸ் (2) நிலைக்கவில்லை. நீஷம் (27) ஓரளவு கைகொடுத்தார். அடில் ரஷித் பந்தை சிக்சருக்கு அனுப்பிய மிட்சல் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அசத்திய இவர், வோக்ஸ் வீசிய 19வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

நியூசிலாந்து அணி 19 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 167 ரன் எடுத்து வெற்றி பெற்றது, 'டி-20' உலக கோப்பை அரங்கில் முதன்முறையாக பைனலுக்குள் நுழைந்தது. மிட்சல் (72), சான்ட்னர் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இதன்மூலம் 2019ல் நடந்த உலக கோப்பை (50 ஓவர்) பைனலில் இங்கிலாந்திடம் கண்ட தோல்விக்கு பதிலடி தந்தது.


வீரர்கள் அஞ்சலி



அபுதாபி மைதானத்தின் தலைமை ஆடுகள பராமரிப்பாளர் மோகன் சிங்கின் மறைவுக்கு இங்கிலாந்து, நியூசிலாந்து வீரர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
11-நவ-202105:27:24 IST Report Abuse
Sanny ஆரம்பத்தில் முக்கிய விக்கட்களை இழந்தாலும், அடுத்து வந்தவர்கள் அபார ஆட்டத்தால் மிகிழ்ச்சியில் இருந்த இங்கிலாந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டார்கள். அருமையான விறு, விறுப்பான ஆட்டம். அடுத்து அரை இறுதியில் ஆஸ்திரேலியா வென்றால் நியூசிலாந்துக்கு கோப்பைவெல்லும் சந்தர்ப்பம் கிடைக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X