பஸ் - லாரி மோதி தீப்பற்றியது 12 பேர் பலி:22 பேர் காயம்

Added : நவ 11, 2021
Share
Advertisement
ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில், பஸ் மீது லாரி மோதி தீப்பற்றிய விபத்தில் 12 பேர் உடல் கருகி பலியாயினர்; படுகாயங்களுடன் 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள பார்மர் மாவட்டம் பலோட்ரா நகரில் இருந்து, பயணியர் பேருந்து ஜோத்பூர் புறப்பட்டது. ஜோத்பூர் தேசிய நெடுஞ்சாலையில், பாண்டியாவாஸ்
 பஸ் - லாரி மோதி தீப்பற்றியது  12 பேர் பலி:22 பேர் காயம்

ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில், பஸ் மீது லாரி மோதி தீப்பற்றிய விபத்தில் 12 பேர் உடல் கருகி பலியாயினர்; படுகாயங்களுடன் 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள பார்மர் மாவட்டம் பலோட்ரா நகரில் இருந்து, பயணியர் பேருந்து ஜோத்பூர் புறப்பட்டது. ஜோத்பூர் தேசிய நெடுஞ்சாலையில், பாண்டியாவாஸ் கிராமம் அருகே, எதிரே வந்த லாரி, பஸ் மீது மோதியது.இதில் பஸ் மற்றும் லாரி தீப்பற்றி எரிந்தன. இதனால் பயணியர் வெளியேற முடியாமல் தவித்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். இருப்பினும், தீயை அணைப்பதற்குள் 11 பேர் உடல் கருகி பலியாயினர். காயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 22 பேர் பலோட்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

விபத்து குறித்து அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X