பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை

Added : நவ 11, 2021
Share
Advertisement
அமிர்தசரஸ்:பஞ்சாபில், பெண் ராணுவ அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொந்தரவுகள் அளிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பஞ்சாபில், முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஒரு ராணுவ தளத்தில், பெண் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.மூத்த ராணுவ அதிகாரி ஒருவர்

அமிர்தசரஸ்:பஞ்சாபில், பெண் ராணுவ அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொந்தரவுகள் அளிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாபில், முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஒரு ராணுவ தளத்தில், பெண் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:பஞ்சாபில் உள்ள ராணுவ தளத்தில், பணியில் உள்ள பெண் ராணுவ அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு தரப்பட்டு உள்ளது. இது தொடர்பாக புகார்களும் வந்துள்ளன. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டப்படி விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.

பெண் ராணுவ அதிகாரி களுக்கு பாதுகாப்பான பணி சூழலை உருவாக்கி கொடுப்பதில் இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது. ராணுவத்தில், பெண் அதிகாரிகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை, இந்திய ராணுவம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X