சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்ச அதிகாரி வீட்டில் துப்பாக்கி வேலுார் போலீசார் விசாரணை

Added : நவ 11, 2021
Share
Advertisement
வேலுார்:வேலுாரில், லஞ்சம் வாங்கி கைதான ஆவின் அதிகாரி வீட்டில் நாட்டு துப்பாக்கி, தோட்டாக்கள் இருந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.வேலுார் மாவட்டம், சத்துவாச்சாரியில் ஆவின் மண்டல அலுவலகம் உள்ளது. இங்கு உ.பி., மாநிலம், ரங்கோலியைச் சேர்ந்த மகேந்திர மால், 54, உதவி பொது மேலாளராக பணிபுரிந்தார்.ஒப்பந்ததாரர் ஜெகன், 45, என்பவருக்கு, 98 ஆயிரம் ரூபாய் பாக்கி வழங்க, 5,000 ரூபாய்

வேலுார்:வேலுாரில், லஞ்சம் வாங்கி கைதான ஆவின் அதிகாரி வீட்டில் நாட்டு துப்பாக்கி, தோட்டாக்கள் இருந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

வேலுார் மாவட்டம், சத்துவாச்சாரியில் ஆவின் மண்டல அலுவலகம் உள்ளது. இங்கு உ.பி., மாநிலம், ரங்கோலியைச் சேர்ந்த மகேந்திர மால், 54, உதவி பொது மேலாளராக பணிபுரிந்தார்.ஒப்பந்ததாரர் ஜெகன், 45, என்பவருக்கு, 98 ஆயிரம் ரூபாய் பாக்கி வழங்க, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, நேற்று முன்தினம் மகேந்திர மால் கைது செய்யப்பட்டார்.

தென்றல் நகரில் உள்ள அவரது வீட்டில் நடத்திய சோதனையில், நாட்டு கைத்துப்பாக்கி ஒன்று, எட்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் கூறியதாவது:மகேந்திர மால் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு கைத்துப்பாக்கிக்கு 'லைசென்ஸ்' இல்லை. ஆறு தோட்டாக்கள் இந்த துப்பாக்கிக்கும், இரண்டு தோட்டாக்கள் வேறு ரக துப்பாக்கிக்கும் பயன்படுத்தக் கூடியவை.

அந்த துப்பாக்கியை வேறு எங்கேயாவது பதுங்கி வைத்திருக்கலாம். துப்பாக்கிகளை எங்கு வாங்கினார் என தெரியவில்லை. இதுபோன்ற நாட்டு கைத்துப்பாக்கிகளை ரவுடிகள் தான் பயன்படுத்துவர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.மகேந்திர மால் மீது லஞ்சம் வாங்கியதற்காக தனி வழக்கும், லைசென்ஸ் இல்லாமல் நாட்டு கைத்துப்பாக்கி வைத்திருந்ததற்காக தனி வழக்கும் பதிவு செய்துள்ளனர். அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X