சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை உபரி நீர் திறப்பு 20 ஆயிரம் கன அடியாக நீடிப்பு

Added : நவ 11, 2021
Share
Advertisement
மேட்டூர்:மேட்டூர் அணை உபரி நீர் திறப்பு 20 ஆயிரம் கன அடியாக நீட்டிக்கப்பட்டது.சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்த பருவமழையால், நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் நேற்று முன்தினம் 119 அடியாக உயர்ந்தது.அணைக்கு வினாடிக்கு, 26 ஆயிரத்து 440 கன அடி நீர் வந்தது. அணை நிரம்ப 1 அடி மட்டும் இருந்த நிலையில், நேற்று

மேட்டூர்:மேட்டூர் அணை உபரி நீர் திறப்பு 20 ஆயிரம் கன அடியாக நீட்டிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்த பருவமழையால், நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் நேற்று முன்தினம் 119 அடியாக உயர்ந்தது.அணைக்கு வினாடிக்கு, 26 ஆயிரத்து 440 கன அடி நீர் வந்தது. அணை நிரம்ப 1 அடி மட்டும் இருந்த நிலையில், நேற்று முன்தினம் வினாடிக்கு, 20 ஆயிரம் கன அடி உபரி நீர், மின் நிலையங்கள் வழியாக காவிரியில் திறந்து விடப்பட்டது.

நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு, 20 ஆயிரம் கன அடியாக சரிந்தது. இதனால், உபரி நீர் திறப்பு, காலை 10:00 மணி முதல் வினாடிக்கு, 19 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. மாலை 4:00 மணிக்கு மேல் நீர் திறப்பு, 20 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.காவிரியில் வினாடிக்கு, 20 ஆயிரம் கன அடி நீருக்கு மேல் வந்தால் மட்டும், அணை முழு கொள்ளளவை எட்டும். அப்போது உபரி நீர், 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மேட்டூர் அணை இடது, வலதுகரை பகுதியில் ஆய்வு செய்த, பேரிடர் மேலாண் கூடுதல் டி.ஜி.பி., அபய்குமார் சிங் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில் இயற்கை பேரிடரால் பாதிக்க வாய்ப்புள்ள 24 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை பாதிப்பு இல்லை. அப்பகுதிகள் கண்காணிக்கப்படுவதோடு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தற்போது, மேட்டூர் அணை இருப்பு நீரை சிறப்பாக கையாளுகின்றனர். மழை வந்தால், அடுத்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.சேலம் டி.ஐ.ஜி., மகேஸ்வரி, சேலம் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா, எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


பவானிசாகர்

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி. தற்போது நீர்மட்டம், 103 அடியாக உள்ளது. ஒரு வார காலமாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது.நேற்று முன்தினம் அதிகபட்சமாக பவானி ஆற்றில், 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. நேற்று காலை அணைக்கு நீர் வரத்து, 2,532 கன அடியாகவும், மதியம், 1,442 கன அடியாகவும் குறைந்தது. இதன் காரணமாக உபரி நீர் திறப்பு, 2,500 கன அடியாக குறைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X