சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலுார், நாகையில் கொட்டுகிறது கன மழை

Added : நவ 11, 2021
Share
Advertisement
கடலுார்:'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள கடலுார் மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டியது. நாகையில் 31 செ.மீ., மழை கொட்டியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில் ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.மாவட்டத்தில் 20 செ.மீ.,க்கு குறையாமல் மழை பொழிவு இருக்கும் என்பதால், 'ரெட் அலர்ட்'
 கடலுார், நாகையில் கொட்டுகிறது கன மழை

கடலுார்:'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள கடலுார் மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டியது. நாகையில் 31 செ.மீ., மழை கொட்டியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில் ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.மாவட்டத்தில் 20 செ.மீ.,க்கு குறையாமல் மழை பொழிவு இருக்கும் என்பதால், 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.அதற்கேற்ப, நேற்று முன்தினம் இரவு முதல் மாவட்டம் முழுதும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.

சராசரியாக 7 செ.மீ., மழை பதிவாகியுள்ள நிலையில், அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 13 செ.மீ., காட்டுமன்னார்கோவில் மற்றும் அண்ணாமலை நகரில் 12 செ.மீ., மழை பெய்துள்ளது.மாவட்டம் முழுதும் குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


நாகையில் 31 செ.மீ.,



நாகை மாவட்டத்தில் மூன்று நாட்களாக இடைவிடாது கொட்டித் தீர்த்த அடைமழையால் 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்ட சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின. 10 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கி வெள்ளக்காடாய் காட்சி அளிக்கிறது. பல வீடுகள் இடிந்து சேதமாகின.திருப்பூண்டி, நாகை வி.டி.பி., மற்றும் சன்னமங்களம் திறந்த வெளி நெல் சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள 20 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அடை மழையில் நனைந்து வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

நாகையில் அதிகபட்சமாக 31 செ.மீ, மழை பெய்துள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இதேபோல, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கன மழை கொட்டி வருகிறது.


எம்.எல்.ஏ., கார் முற்றுகை

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் கண்ணாற்றில், தமிழக அரசின் முதன்மை செயலர் விஜயகுமார், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ., அண்ணாதுரை உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். மதுக்கூர் அருகே, மொச்சிக்குளம் பகுதியில், கலெக்டர், எம்.எல்.ஏ., கார்களை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

மூன்று தினங்களாக, குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி அவதிப்பட்டு வருவதாகவும், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் கண்டு கொள்ளவில்லை எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.உடனடியாக தண்ணீரை வெளியேற்றுமாறு, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து, 'அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், என்னை தொடர்பு கொள்ளுங்கள்' என கூறிய கலெக்டர், தன் மொபைல் போன் எண்ணை கொடுத்து சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X