சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேராசிரியைக்கு பாலியல் தொல்லை மாமனார், கணவர் கைது

Added : நவ 11, 2021
Share
Advertisement
திருநெல்வேலி:நெல்லையில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார், கண்டுகொள்ளாத கணவர் கைது செய்யப்பட்டனர்.மேலப்பாளையம் சீயோன்நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் ஜோசப் 64. இவரது மகன் பெஞ்சமின் டேவிட் சத்யநாதன் 34. சேரன்மகாதேவி இந்தியன் வங்கி கிளையில் பணியாற்றுகிறார். மனைவி கிறிஸ்டினா ரஞ்சிதம் 29. தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியை. 2016ல் திருமணம் நடந்தது.

திருநெல்வேலி:நெல்லையில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார், கண்டுகொள்ளாத கணவர் கைது செய்யப்பட்டனர்.

மேலப்பாளையம் சீயோன்நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் ஜோசப் 64. இவரது மகன் பெஞ்சமின் டேவிட் சத்யநாதன் 34. சேரன்மகாதேவி இந்தியன் வங்கி கிளையில் பணியாற்றுகிறார். மனைவி கிறிஸ்டினா ரஞ்சிதம் 29. தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியை. 2016ல் திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது 100 பவுன் நகை, ரூ. 5 லட்சம், கார் வரதட்சணையாக கொடுத்தனர். திருமணத்தின் போது பெஞ்சமின், வேளாங்கண்ணியில் பணியாற்றியதால் வாரம் ஒரு முறை ஊருக்கு வருவார்.கிறிஸ்டினாவிற்கு மாமனார் பாஸ்கரன் ஜோசப், அலைபேசியில் ஆபாச படங்கள் அனுப்பியும் நேரடியாகவும் பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து கணவரிடம் தெரிவித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை.

இதுதொடர்பாக இரு குடும்பத்தினர் பேசியும் தீர்வு ஏற்படவில்லை. இதனிடையே பெஞ்சமின் விவாகரத்து கோரி திருநெல்வேலி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் பாலியல் தொல்லை குறித்து கிறிஸ்டினா மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பெஞ்சமின், பாஸ்கரன் ஜோசப்பை கைது செய்தனர். பெஞ்சமின் தாயார் சாந்தினியை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X