கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு வழக்கு: ஜாமின் தள்ளுபடி

Added : நவ 11, 2021
Share
Advertisement
ஊட்டி:கோடநாடு வழக்கில், இருவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான டிரைவர் கனக ராஜ், சில ஆண்டுகளுக்கு முன் கார் விபத்தில் மர்மமான முறையில் இறந்தார். தடயங்களை அழித்ததாக, அவரது சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் அக்டோபர் 25ல் கைது செய்யப்பட்டனர். இவர்களது ஜாமின் மனு விசாரணை, நேற்று

ஊட்டி:கோடநாடு வழக்கில், இருவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான டிரைவர் கனக ராஜ், சில ஆண்டுகளுக்கு முன் கார் விபத்தில் மர்மமான முறையில் இறந்தார். தடயங்களை அழித்ததாக, அவரது சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் அக்டோபர் 25ல் கைது செய்யப்பட்டனர்.

இவர்களது ஜாமின் மனு விசாரணை, நேற்று நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் நடந்தது. அரசு தரப்பில், 'போலீஸ் விசாரணையில், மூன்று மொபைல் போன்கள், ஆறு சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.'பல்வேறு தகவல் கிடைக்க இருப்பதால், ஜாமின் வழங்க கூடாது' என, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சஞ்சய் பாபா, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X