பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம்

Added : நவ 11, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்தசஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாணம் நடந்தது.பரமக்குடி தரைப்பாலம்அருகில் உள்ள இக்கோயிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் கடந்த வாரம் தொடங்கியது. தினமும் மாலை சுவாமி பல்வேறு அலங்காரங்களில் அருள்பாலித்தார்.நேற்று முன்தினம் மாலை சூரனை வதம் செய்யும் லீலை நடந்தது. நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை
 பரமக்குடியில் சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம்

பரமக்குடி : பரமக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்தசஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாணம் நடந்தது.

பரமக்குடி தரைப்பாலம்அருகில் உள்ள இக்கோயிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் கடந்த வாரம் தொடங்கியது. தினமும் மாலை சுவாமி பல்வேறு அலங்காரங்களில் அருள்பாலித்தார்.நேற்று முன்தினம் மாலை சூரனை வதம் செய்யும் லீலை நடந்தது. நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருள்பாலித்தார்.

சிவாச்சாரியர்கள் வேதமந்திரம் முழங்க, பக்தர்களின் 'அரோகரா' கோஷத்துடன் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது.இதேபோல் பாரதி நகர் முருகன் கோயிலில் மாலை நேரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.

தொண்டி
தொண்டி அருகே அருகே நம்புதாளை பாலமுருகன் கோயில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று திருக்கல்யாணம் நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் பாலமுருகன் திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X