கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜெ., படம் அகற்றம்: எதிர்த்த மனு தள்ளுபடி

Added : நவ 11, 2021
Share
Advertisement
மதுரை:மறைந்த முதல்வர் ஜெயலலிதா படம், அம்மா உணவகங்களில் அகற்றப்பட்டதற்கு எதிரான வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.திருநெல்வேலி அ.தி.மு.க., நிர்வாகி பாப்புலர் முத்தையா தாக்கல் செய்த மனு:அ.தி.மு.க., ஆட்சியில், அம்மா உணவகங்கள் துவக்கப்பட்டன; நகர்ப்புற ஏழைகள் பயனடைகின்றனர்.திருநெல்வேலி மாநகராட்சி பகுதி அம்மா உணவகங்களில் இடம்பெற்றிருந்த, மறைந்த முதல்வர்

மதுரை:மறைந்த முதல்வர் ஜெயலலிதா படம், அம்மா உணவகங்களில் அகற்றப்பட்டதற்கு எதிரான வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

திருநெல்வேலி அ.தி.மு.க., நிர்வாகி பாப்புலர் முத்தையா தாக்கல் செய்த மனு:அ.தி.மு.க., ஆட்சியில், அம்மா உணவகங்கள் துவக்கப்பட்டன; நகர்ப்புற ஏழைகள் பயனடைகின்றனர்.திருநெல்வேலி மாநகராட்சி பகுதி அம்மா உணவகங்களில் இடம்பெற்றிருந்த, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் பழனிசாமி படங்கள் அகற்றப்பட்டுள்ளன.

இது, அரசின் கொள்கை முடிவிற்கு எதிரானது. தற்போதைய முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படங்கள் இடம்பெற்றுள்ளன. ஜெயலலிதா, பழனிசாமி படங்கள் மீண்டும் இடம் பெற உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டார்.நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ''அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X