சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுவாமி சிலைகள் உடைப்பு சம்பவம் கடலுார் வாலிபர் 2வது முறை கைது

Added : நவ 11, 2021
Share
Advertisement
பெரம்பலுார்:-சிறுவாச்சூரில், மூன்று முறை சுவாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தியதாக, கடலுாரைச் சேர்ந்த வாலிபரை, இரண்டாவது முறையாக பெரம்பலுார் போலீசார் கைது செய்தனர்.முதல் முறைபெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள பெரியசாமி மலையில் பெரியசாமி, செங்கமலையார் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் இருந்த சுட்ட மண்ணால் செய்யப் பட்ட 14 சிலைகள், அக்டோபர் 6ம்
 சுவாமி சிலைகள் உடைப்பு சம்பவம் கடலுார் வாலிபர் 2வது முறை கைது

பெரம்பலுார்:-சிறுவாச்சூரில், மூன்று முறை சுவாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தியதாக, கடலுாரைச் சேர்ந்த வாலிபரை, இரண்டாவது முறையாக பெரம்பலுார் போலீசார் கைது செய்தனர்.


முதல் முறை

பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள பெரியசாமி மலையில் பெரியசாமி, செங்கமலையார் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் இருந்த சுட்ட மண்ணால் செய்யப் பட்ட 14 சிலைகள், அக்டோபர் 6ம் தேதி உடைத்து சேதப்படுத்தப்பட்டன.
இது தொடர்பாக, அப்பகுதியில் சுற்றித் திரிந்த கடலுார் மாவட்டம், காட்டு மன்னார்கோவில் அருகே, கால்நாட்டான் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த நாதன், 38 என்பவரை, பெரம்பலுார் போலீசார் கைது செய்தனர்.அவர் ஜாமினில் வெளியே வந்த நிலையில், அக்டோபர் 27ல், மீண்டும் பெரியசாமி கோவிலில் 18 சிலைகள் உடைக்கப்பட்டன.

இதையடுத்து, கோவில்களில் கண்காணிப்பு 'கேமரா' பொருத்தியதோடு, இரு காவலர்களும் நியமிக்கப்பட்டனர். போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு மூன்றாவது முறையாக, பெரியசாமி கோவில், ஆத்தடி சித்தர் கோவில், பெருமாள் கோவில், செங்கமலையார் கோவில்களில், ஒன்பது சிலைகள் உடைக்கப்பட்டன.


கண்காணிப்பு 'கேமரா'

பெரம்பலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். நேற்று, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, சம்பவத்தன்று காலை மதுரகாளியம்மன் கோவிலுக்கு வந்த நாதன், சுவாமி கும்பிட்டு பெரியசாமி கோவிலின் நுழைவு வாயிலை தாண்டி நடந்து சென்றது, கேமராவில் பதிவாகி இருந்தது.

சுவாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தியது நாதன் என்பதை உறுதி செய்த போலீசார், அவரை தேடி வந்தனர். நேற்று பெரியசாமி கோவில் அருகே உள்ள தகர கொட்டைகையில் படுத்திருந்த நாதனை கைது செய்தனர்.அவரிடம் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பது குறித்து, விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X