விளாச்சேரியில் தயாராகும் மெகா அகல் விளக்குகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விளாச்சேரியில் தயாராகும் மெகா அகல் விளக்குகள்

Added : நவ 11, 2021
Share
திருப்பரங்குன்றம் : தென் திருப்பதி எனப் போற்றப்படும் ஸ்ரீவில்லிப்புத்துார் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை விளாச்சேரியில் களிமண்ணாலான மெகா அகல் விளக்குகள் தயாராகின்றன. இங்கு களிமண்ணால் ஒரு இஞ்ச் முதல் அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.சாம்பசிவம்: இது எங்களுக்கு பரம்பரை தொழில். 28 ஆண்டுகளாக பெரிய அகல் விளக்குகள் தயாரித்து
 விளாச்சேரியில் தயாராகும் மெகா அகல் விளக்குகள்

திருப்பரங்குன்றம் : தென் திருப்பதி எனப் போற்றப்படும் ஸ்ரீவில்லிப்புத்துார் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை விளாச்சேரியில் களிமண்ணாலான மெகா அகல் விளக்குகள் தயாராகின்றன.

இங்கு களிமண்ணால் ஒரு இஞ்ச் முதல் அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.சாம்பசிவம்: இது எங்களுக்கு பரம்பரை தொழில். 28 ஆண்டுகளாக பெரிய அகல் விளக்குகள் தயாரித்து திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கிறோம். 2 அடி உயரம், 2 அடி அகலத்தில் 6 மெகா அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.

இவ்விளக்கு 30 லிட்டர் எண்ணெய் பிடிக்கும். 3 நாட்கள் தொடர்ந்து எரியும். இத்துடன் 2 லி., கொள்ளளவு கொண்ட ஒரு அடி உயரத்தில் 25 விளக்குகளும், 200 மில்லி கொள்ளளவு கொண்ட 3 ஆயிரம் விளக்குகளும் திருவண்ணாமலை தீபத்திற்காக தயாரிக்கிறோம். வெயில் அடித்தால்தான் பணிகள் நிறைவடையும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X