பொது செய்தி

தமிழ்நாடு

பருவமழை முன்னெச்சரிக்கை

Added : நவ 11, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : திருப்புல்லாணி வட்டாரத்தில் 5600 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது 20 முதல் 45 நாட்கள் பயிராக உள்ளது. விவசாயிகள் வயல்களில் களைக்கொல்லி இட்டும், களை பறிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.கடந்த ஐந்து நாட்களாக பரவலாக மழை பெய்வதால் போதிய சூரிய வெளிச்சமின்றி உள்ளதால் நெற்பயிரை இலைசுருட்டுப்புழு மற்றும் குலைநோய் தாக்கும் அபாயம் உள்ளது.ராமநாதபுரம்

ராமநாதபுரம் : திருப்புல்லாணி வட்டாரத்தில் 5600 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது 20 முதல் 45 நாட்கள் பயிராக உள்ளது.

விவசாயிகள் வயல்களில் களைக்கொல்லி இட்டும், களை பறிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.கடந்த ஐந்து நாட்களாக பரவலாக மழை பெய்வதால் போதிய சூரிய வெளிச்சமின்றி உள்ளதால் நெற்பயிரை இலைசுருட்டுப்புழு மற்றும் குலைநோய் தாக்கும் அபாயம் உள்ளது.ராமநாதபுரம் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் ேஷக் அப்துல்லா, திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குனர் அமர்லால் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

அதிக மழை பெய்யும் போது வயலில் தேங்கியுள்ள கூடுதல் நீரை வடிகட்டவேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு கிலோ சூடோமோனஸ் நுண்ணுயிரியை 20 கிலோ மணல் அல்லது மக்கிய தொழு உரத்துடன் வயலில் இட வேண்டும், என அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X