வாக்காளர் சிறப்பு முகாம்: புறக்கணிக்க முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் சிறப்பு முகாம்: புறக்கணிக்க முடிவு

Added : நவ 11, 2021
Share
மதுரை : தேர்தல் மதிப்பூதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவ., 13, 14, 27, 28ல் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை புறக்கணிக்க போவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் அறிவித்தனர்.மதுரை கலெக்டர் அலுவலகத்தில் சங்க ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி தலைமையிலும், செயலாளர் அசோக் முன்னிலையிலும் நடந்தது. பொருளாளர் கோபி வரவேற்றார்.
 வாக்காளர் சிறப்பு முகாம்: புறக்கணிக்க முடிவு

மதுரை : தேர்தல் மதிப்பூதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவ., 13, 14, 27, 28ல் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை புறக்கணிக்க போவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் அறிவித்தனர்.

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் சங்க ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி தலைமையிலும், செயலாளர் அசோக் முன்னிலையிலும் நடந்தது. பொருளாளர் கோபி வரவேற்றார்.

மாநில பொதுச்செயலாளர் முருகையன், துணைத் தலைவர் ேஷக் இப்ராஹிம், இணை செயலாளர் பிரேம்குமார் உள்ளிட்டோர் பேசினர்.நிர்வாகிகள் கூறியதாவது: தேர்தல் முடிந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் தேர்தல் செலவினங்கள் வழங்கப்படாததால் தாசில்தார்கள் சிரமப்படுகின்றனர்.

ஆறு சட்டசபை தொகுதிகளுக்கு மேல் உள்ள மாவட்டங்களில் நேர்முக உதவியாளர்(தேர்தல்) பணியிடங்களை உருவாக்க வேண்டும். இக்கோரிக்கையை நிறைவேற்றாததை கண்டித்து வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை மாநிலம் முழுவதுமுள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருவாய் அலுவலர்கள் புறக்கணிப்பர் என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X