பொது செய்தி

தமிழ்நாடு

தெருவிளக்கு திட்டம்: மின்வாரியம் மெத்தனம்

Added : நவ 11, 2021
Share
Advertisement
தொண்டி : கலியநகரி ஊராட்சியில் தெருவிளக்கு விஸ்தீரணம் செய்வதற்காக பணம் செலுத்தியும் திட்டம் செயல்படுத்தாததால் கிராம மக்கள் பாதிக்கபட்டுள்ளனர்.தொண்டி அருகே கலியநகரி ஊராட்சியில் பாசிபட்டினம், கலியநகரி, பரப்புவயல் ஆகிய கிராமங்கள் உள்ளன. கடற்கரை பகுதியான இங்கு அடிக்கடி மின்தடை, குறைந்த அழுத்த மின்சாரத்தால் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர். கூடுதலாக தெருவிளக்கு

தொண்டி : கலியநகரி ஊராட்சியில் தெருவிளக்கு விஸ்தீரணம் செய்வதற்காக பணம் செலுத்தியும் திட்டம் செயல்படுத்தாததால் கிராம மக்கள் பாதிக்கபட்டுள்ளனர்.

தொண்டி அருகே கலியநகரி ஊராட்சியில் பாசிபட்டினம், கலியநகரி, பரப்புவயல் ஆகிய கிராமங்கள் உள்ளன. கடற்கரை பகுதியான இங்கு அடிக்கடி மின்தடை, குறைந்த அழுத்த மின்சாரத்தால் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர். கூடுதலாக தெருவிளக்கு அமைக்க ஊராட்சி முடிவு செய்தது.ஊராட்சி தலைவர் உம்முசலிமா கூறியதாவது:கூடுதல் தெருவிளக்குகள்அமைக்க ஊராட்சி நிதியிலிருந்து ரூ.10 லட்சம் தொண்டி துணை மின் நிலையத்தில் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

ஆனால் ஆறு மாதமாகியும் பணிகள் துவங்கவில்லை, என்றார்.தொண்டி மின் வாரிய அலுவலர் ஜெயகாந்தன் கூறியதாவது: கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க ஊராட்சி கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் தேவையான உபகரணங்கள் இல்லை. அதனால் தாமதமகிறது. உபகரணங்கள் வந்தவுடன் பணிகள் நடைபெறும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X