பொது செய்தி

தமிழ்நாடு

அனைத்து அஞ்சலகங்களிலும் விரைவில் வங்கி சேவை

Added : நவ 11, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : மாவட்டத்திலுள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஒருங்கிணைந்த வங்கி சேவை கொண்டுவரப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் இரு தலைமை அஞ்சலகங்கள், 52 துணை அஞ்சலகங்களில் 2014 ல் ஒருங்கிணைந்த வங்கி சேவை வழங்கப்படுகிறது. மேலும் ஐந்து துணை அஞ்சலகங்கள் இணையதள இணைப்பு கிடைக்காததால் செயல்படாமல் இருந்தது. தற்போது அச்சுந்தன்வயல், மண்டலமாணிக்கம்,பாம்பூர், தொருவளூர் ஆகிய இடங்களில்

ராமநாதபுரம் : மாவட்டத்திலுள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஒருங்கிணைந்த வங்கி சேவை கொண்டுவரப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் இரு தலைமை அஞ்சலகங்கள், 52 துணை அஞ்சலகங்களில் 2014 ல் ஒருங்கிணைந்த வங்கி சேவை வழங்கப்படுகிறது. மேலும் ஐந்து துணை அஞ்சலகங்கள் இணையதள இணைப்பு கிடைக்காததால் செயல்படாமல் இருந்தது. தற்போது அச்சுந்தன்வயல், மண்டலமாணிக்கம்,பாம்பூர், தொருவளூர் ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த வங்கிசேவை கொண்டுவரப்பட்டுஉள்ளது.

இறுதியாக சனவேலி துணை அஞ்சலங்கத்தில்கோட்டக் கண் காணிப்பாளர் சித்ரா வங்கி சேவைகளை தொடங்கி வைத்தார். அவர் கூறியதாவது: தென்மண்டல அளவில் அனைத்து அஞ்சலகங்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. கணக்கு துவங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம்., வசதி உண்டு, ஆதார்கார்டு மூலம் அனைத்து வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம், ஆதார் சேர்க்கை, திருத்தம், மின்சாரம், போன் பில்களை செலுத்தும் வசதியும் உள்ளது,' என்றார்.-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X