சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு வேலை பெயரில் மோசடி 'மாஜி' பெண் கவுன்சிலர் கைது

Added : நவ 11, 2021
Share
Advertisement
நாமக்கல்:அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் பெண் கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், ஓடப்பள்ளியைச் சேர்ந்தவர் கல்யாணி, 50. இவர், 2006ல் ஓடப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராக இருந்தார். நுாலகராக வேலை கிடைத்ததை அடுத்து, வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். ஆயினும், அ.தி.மு.க., வட்டாரத்தில் செல்வாக்கு

நாமக்கல்:அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் பெண் கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், ஓடப்பள்ளியைச் சேர்ந்தவர் கல்யாணி, 50. இவர், 2006ல் ஓடப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராக இருந்தார். நுாலகராக வேலை கிடைத்ததை அடுத்து, வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். ஆயினும், அ.தி.மு.க., வட்டாரத்தில் செல்வாக்கு உள்ளவராக இருந்தார்.

அப்போது, அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்றுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன், அதே பகுதியைச் சேர்ந்த, தி.மு.க., கிளை செயலர் தங்கராசுவின் சகோதரர் மகனுக்கு, அரசு வேலை வாங்கித் தருவதாக, 8 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். ஆனால், வேலை வாங்கித் தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது, ரயில்வே துறையில் பணி நியமன கடிதம் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த உத்தரவு போலி என்பது தெரிந்தது.

பலமுறை பணம் கேட்டும் தராததுடன், கல்யாணி மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. மனம் வெறுத்த தங்கராசு தீக்குளித்து இறந்தார். இந்த வழக்கில், பள்ளிபாளையம் போலீசார், கல்யாணியை கைது செய்தனர். பின், ஜாமினில் விடுதலையானார்.

இந்நிலையில், சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன், 36, அவரது பெரியப்பா மகள் மதிவதினி, 32 ஆகியோர், கல்யாணியிடம் வேலைக்காக, தலா 12 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்ததால், நாமக்கல் மாவட்ட குற்றப் பிரிவில் புகார் அளித்தனர்.இதன் அடிப்படையில், மோசடி வழக்கு பதிந்து, கல்யாணியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X