அரசியல் செய்தி

தமிழ்நாடு

எதிர்க்கட்சியினரை விமர்சிப்பதை தவிர்த்து அரசு நிவாரண பணிகளில் ஈடுபடுமா: பா.ஜ., தேசிய செயலாளர் பேட்டி

Added : நவ 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை:''எதிர்க்கட்சியினரை விமர்சிப்பதை தவிர்த்து வெள்ள நிவாரணப்பணிகளை தமிழக அரசு முடுக்கி விட வேண்டும்,'' என மதுரையில் பா.ஜ., சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் இப்ராஹிம் வலியுறுத்தினார்.அவர் மேலும் கூறியதாவது: வடகிழக்குபருவமழை துவங்கிய நாட்களிலேயே தலைநகர் சென்னையே தத்தளிக்கிறது. இதை முன்கூட்டியே கணித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறியதே இவ்வளவு

மதுரை:''எதிர்க்கட்சியினரை விமர்சிப்பதை தவிர்த்து வெள்ள நிவாரணப்பணிகளை தமிழக அரசு முடுக்கி விட வேண்டும்,'' என மதுரையில் பா.ஜ., சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறியதாவது: வடகிழக்குபருவமழை துவங்கிய நாட்களிலேயே தலைநகர் சென்னையே தத்தளிக்கிறது. இதை முன்கூட்டியே கணித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறியதே இவ்வளவு பாதிப்புகளுக்கு காரணம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், இருப்பிட வசதிகளை உறுதி செய்வதுடன், சென்னையில் கால்வாய்களை துார்வாரி மழைநீர் வெளியேற நிரந்தர நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் எடுக்க வேண்டும்.

காவல் துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வர், சமீபத்தில் காவல்துறையை இழிவு படுத்துவதாக வெளியான ஜெய்பீம் படத்தை பாராட்டுவது போலீஸ் மீதான மக்கள் நம்பிக்கையை இழக்க வைக்கும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் போலீசாரின் நலன்கள் அவ்வளவாக பேணப்படுவதில்லை. அவர்களுக்கு சம்பள உயர்வு, தரமான குடியிருப்புகள் உள்ளிட்ட வசதிகளை முதல்வர் செய்து கொடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
11-நவ-202108:40:53 IST Report Abuse
R.RAMACHANDRAN காவல் துறை நீதித் துறை ஆகியவற்றின் கொடுங்கோன்மைகளுக்கு ஆதரவாக நடந்துகொண்டு குற்றங்கள் பல புரிந்து வழக்குகள் இல்லாமல் பார்த்துக்கொள்வதில் அரசியல்வாதிகள் குறியாக உள்ளனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X