பொது செய்தி

தமிழ்நாடு

கோவை - பழநி ரயில் மீண்டும் இயக்கம்

Added : நவ 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:கோவையில் இருந்து பழநிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முதல் இயங்கத் துவங்கியது.கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த கோவை - பழநி எக்ஸ்பிரஸ் ரயில், மீண்டும் இயங்க துவங்கியுள்ளது. ரயிலை கோவையில் பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது:குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் இந்த ரயிலால் நடுத்தர மக்கள் பயனடைவர்.
 கோவை - பழநி ரயில் மீண்டும் இயக்கம்

கோவை:கோவையில் இருந்து பழநிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முதல் இயங்கத் துவங்கியது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த கோவை - பழநி எக்ஸ்பிரஸ் ரயில், மீண்டும் இயங்க துவங்கியுள்ளது. ரயிலை கோவையில் பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அவர் நிருபர்களிடம் கூறியதாவது:குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் இந்த ரயிலால் நடுத்தர மக்கள் பயனடைவர். ஆனைமலை மாசானியம்மன் கோவில், பழநி முருகன் கோவில், டாப்சிலிப், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகள் எளிதில் செல்ல முடியும்.

மேலும், இந்த ரயில், பழநியில் இருந்து மதுரை வரை செல்லும். கோவையில் இருந்து ராமேஸ்வரம், துாத்துக்குடி, நாகர்கோவில் பகுதிகளுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க, ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.கோவை ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
11-நவ-202118:06:56 IST Report Abuse
RADE எந்த வழி, இது பொள்ளாச்சி மார்கத்தில் செல்லும் வண்டியா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X