பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் தொட்டிகளில் குளோரினேஷன் ஊராட்சி செயலர்களுக்கு உத்தரவு

Added : நவ 11, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்டத்தில் 420 கிராம ஊராட்சிகளில் மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் தினமும் குளோரினேஷன் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என ஊராட்சி செயலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இம்மாவட்டத்தில் 13 ஒன்றியங்களிலுள்ள இந்த கிராம ஊராட்சிகளுக்குட்பட்டு 1500க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பருவமழை காலம் என்பதால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ஊராட்சி

மதுரை : மதுரை மாவட்டத்தில் 420 கிராம ஊராட்சிகளில் மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் தினமும் குளோரினேஷன் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என ஊராட்சி செயலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் 13 ஒன்றியங்களிலுள்ள இந்த கிராம ஊராட்சிகளுக்குட்பட்டு 1500க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பருவமழை காலம் என்பதால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ஊராட்சி செயலர்களுக்கு கலெக்டர் அனீஷ்சேகர், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரை உத்தரவிட்டுள்ளனர்.மேல்நிலை குடிநீர் தொட்டிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்யவும், அதை முறையாக பராமரித்து வீடுகளுக்கு குடிநீர் வழங்கவும் ஊராட்சி செயலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் சில பகுதிகளில் டெங்கு பாதிப்பு அபாயம் உள்ளதால் கொசுக்களை ஒழிக்கவும், மழைநீர் தேங்காமல் வெளியேற்றவும் தலைவர்கள், வார்டு உறுப்பினர்களுடன் இணைந்து ஊராட்சி செயலர்கள் உறுதி செய்ய வேண்டும்.ஊராட்சி கணக்கு எண் 2, வாய்ப்புள்ள ஊராட்சிகளில் கணக்கு எண் 5 மற்றும் 7 லிருந்தும், மனை வரன்முறை கட்டண கணக்கிலிருந்தும் நிதி மாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட பி.டி.ஓ.,க்களிடம் அனுமதி பெறலாம் என உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X