பொது செய்தி

தமிழ்நாடு

கால்வாயை சீரமைக்க கோரிக்கை

Added : நவ 11, 2021
Share
Advertisement
சாயல்குடி : சாயல்குடியில் மழைநீர் தேங்குவதை தடுக்க கால்வாய்களை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.தற்போது பருவமழை தொடங்கி உள்ளதால் ஒவ்வொரு ஆண்டும்மழையினால் அதிகம் பாதிப்பிற்குள்ளாகும் பகுதியாக சாயல்குடி அண்ணாநகர் உள்ளது.சாயல்குடி 12வது வார்டு அண்ணா நகர் பகுதியில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் மழைநீர் செல்லக்கூடிய கால்வாய் மராமத்து

சாயல்குடி : சாயல்குடியில் மழைநீர் தேங்குவதை தடுக்க கால்வாய்களை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.தற்போது பருவமழை தொடங்கி உள்ளதால் ஒவ்வொரு ஆண்டும்மழையினால் அதிகம் பாதிப்பிற்குள்ளாகும்

பகுதியாக சாயல்குடி அண்ணாநகர் உள்ளது.சாயல்குடி 12வது வார்டு அண்ணா நகர் பகுதியில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் மழைநீர் செல்லக்கூடிய கால்வாய் மராமத்து செய்யாமல் தூர்ந்து போய் உள்ளது.

இதனால் குடியிருப்புப் பகுதிகள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம் ஆகியவற்றிலிருந்து இருந்து வெளியேறும் மழைநீர் செல்ல வழியில்லாமல் அடைபட்டுள்ளது.

சாயல்குடி பேரூராட்சி முன்னாள் தலைவர் முகமது ஜின்னா கூறியதாவது: கடந்த ஆண்டு ஜனவரியில் பெய்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. குடியிருப்போர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். வரும் காலங்களிலும் இதே நிலை தொடராமல்இருக்க ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வரத்து கால்வாயை அளவீடு செய்து சீரமைக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X