பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீரின்றி வறண்ட திருப்பாச்சேத்தி கண்மாய்

Added : நவ 11, 2021
Share
Advertisement
திருப்புவனம் : தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி தெற்கு கண்மாய் மட்டும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.வைகை ஆற்றின் வலது பிரதான கால்வாய் மூலம் திருப்பாச்சேத்தி தெற்கு கண்மாய்க்கு வரத்து கால்வாய் உள்ளது. நான்கு வழிச்சாலை அருகே கால்வாயின் முகப்பு மேடாக இருப்பதால் கால்வாயில் தண்ணீர் திறந்தாலும்
 தண்ணீரின்றி வறண்ட திருப்பாச்சேத்தி கண்மாய்

திருப்புவனம் : தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி தெற்கு கண்மாய் மட்டும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

வைகை ஆற்றின் வலது பிரதான கால்வாய் மூலம் திருப்பாச்சேத்தி தெற்கு கண்மாய்க்கு வரத்து கால்வாய் உள்ளது. நான்கு வழிச்சாலை அருகே கால்வாயின் முகப்பு மேடாக இருப்பதால் கால்வாயில் தண்ணீர் திறந்தாலும் கண்மாய்க்கு வருவதில்லை.அந்த இடத்தில் ஷட்டர் அமைத்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

இன்று வரை பொதுப்பணித்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.விவசாயிகள் தரப்பில் கூறுகையில் : 300 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த கண்மாயை நம்பி 450 ஏக்கர் விவசாயம் நடைபெறுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக தண்ணீர் வராததால் கண்மாயை சுற்றியுள்ள விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது.

கண்மாய் முழுவதும் கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. வைகையில் நீர் வரத்து உள்ள நிலையில் தெற்கு கண்மாய்க்கும் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X