இந்தியா

எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி மீண்டும் விடுவிக்க அரசு அனுமதி

Updated : நவ 11, 2021 | Added : நவ 11, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த எம்.பி.,க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை மீண்டும் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டது.எம்.பி.,க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் நிதி இரண்டு தவணைகளில் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் தீவிரமடைந்ததை அடுத்து, பொது
 எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி மீண்டும் விடுவிக்க அரசு அனுமதி

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த எம்.பி.,க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை மீண்டும் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டது.எம்.பி.,க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் நிதி இரண்டு தவணைகளில் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் தீவிரமடைந்ததை அடுத்து, பொது சுகாதார செலவுகளை சமாளிப்பதற்காக, 2020 - 21 மற்றும் 2021 - 22ம் நிதியாண்டுக்கான எம்.பி.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.


latest tamil newsதற்போது கொரோனா தொற்று பரவல் கணிசமாக குறைய துவங்கி உள்ளதை அடுத்து தொகுதி மேம்பாட்டு நிதியை எம்.பி.,க்களுக்கு மீண்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி அளிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:எம்.பி.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் மீதமுள்ள மாதங்களில் செலவு செய்ய ஒரேதவணையாக 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். அடுத்த நிதியாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி ரூபாய் இரண்டு தவணைகளாக விடுவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். - நமது சிறப்பு நிருபர் -Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
11-நவ-202110:37:01 IST Report Abuse
M S RAGHUNATHAN Another ing for our honourable members of parliament to loot public money. The centre should say the amount released towards the Constituency development fund is subject to CAG Audit and performace audit of the work should be done by respective central government DEPARTMENTS such as CPWD, etc. Secondly the amount for this fund is released from the Tax PUers Money. Any development work carried out SHOULD NOT BEAR THE NAME OF THE MP BUT SHOULD ONLY be mentioned as that the work has been carried out from the constituency development fund provided by the central government to be utilised by the MP through the district administration. NO NAME OF MP.SHOULD BE DISPLAYED. ADVERTISEMENT AT THE COST OF PROPLE'S MONEY SHOULD BE BANNED.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
11-நவ-202110:31:24 IST Report Abuse
vbs manian வீட்டை விட்டு விரட்டிய பெருச்சாளியை மீண்டும் வீட்டிற்குள் அழைக்கிறார்கள்.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
11-நவ-202108:26:25 IST Report Abuse
VENKATASUBRAMANIAN ஒவ்வொரு mp யும் செலவு கணக்குகளை பொது வெளில வெளியிடவேண்டும். அப்படி செய்யாதவர்களிடமிர்ந்து 10கோடி வசூல் செய்ய வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X