பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் விடாது பெய்யும் தொடர் மழை; வீடுகளுக்குள் மழை தண்ணீர்; மக்கள் அவதி

Updated : நவ 11, 2021 | Added : நவ 11, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை: சென்னையின் கிழக்கே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக சென்னையில் நேற்று(நவ., 10) மாலை பெய்த கனமழை தற்போது நள்ளிரவு வரை தொடர்ச்சியாக பெய்து வருகிறது.சென்னையில் மழை பெய்யும் இடங்கள்தி.நகர், கோடம்பாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை, ராயப்பேட்டை, மெரினா, சைதாப்பேட்டை, கீழ்க்கட்டளை, ஆதம்பாக்கம், வேளச்சேரி, மயிலாப்பூர், பகுதிகளில் மழை

சென்னை: சென்னையின் கிழக்கே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக சென்னையில் நேற்று(நவ., 10) மாலை பெய்த கனமழை தற்போது நள்ளிரவு வரை தொடர்ச்சியாக பெய்து வருகிறது.



latest tamil news




சென்னையில் மழை பெய்யும் இடங்கள்



தி.நகர், கோடம்பாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை, ராயப்பேட்டை, மெரினா, சைதாப்பேட்டை, கீழ்க்கட்டளை, ஆதம்பாக்கம், வேளச்சேரி, மயிலாப்பூர், பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

கடந்த சிலநாட்களாக சென்னையில் பெய்து வரும் மழையால், சென்னையின் பல்வேறு இடங்களில் குடியுருப்புகள், தெருக்கள், சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



அன்றாடத் தேவைகளுக்கு கூட வெளியில் செல்லமுடியாத அவல நிலையில் உள்ளனர். தாழ்வான பகுதிகளில் கடந்த 4 நாட்களாக வீடுகளினுள் மழை நீரோடு கழிவு நீரும் கலந்து தேங்கியுள்ளது. அதனை வெளியேற்ற முடியாமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

தி.நகர், மேற்கு மாம்பலம் பகுதிகளில் சாலையில் 2 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அசோக் நகர், அடையாறு, கொருக்குப்பேட்டையில் பகுதிகளில் வெள்ளம் இன்னும் வடியாமல் உள்ளது. மழையால் சென்னை பெருநகரின் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


பேரிடர் மீட்பு படையினர்



இன்று(நவ.,11) காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்பதால், மழையால் பாதிப்படைந்தோருக்கு உதவி செய்வதற்காக மூன்று பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

சென்னை மாநகராட்சி, ராட்சத மோட்டார் மூலமாக தேங்கிய நீரை வெளியேற்றி வருகிறது. இருப்பினும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தெருக்களில் நீர் தேக்கம் அப்படியே உள்ளது. இதுதவிர சென்னையின் அரங்கநாதன் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை மழைநீரில் மூழ்கியுள்ளன. மேலூம் பல இடங்களில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.


8 விமான சேவைகள் ரத்து



சென்னையில் இருந்து புறப்படவிருந்த 4 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வரவிருந்த 4 விமானங்கள் என 8 விமான சேவைகள், இன்று(நவ,,11) மற்றும் நாளை(நவ.,12) தேதிகளில் தொடர் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என சென்னை விமான நிலையம் அறிவிப்பு வெளிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N. Srinivasan - Chennai,இந்தியா
11-நவ-202109:32:23 IST Report Abuse
N. Srinivasan முன்பு வந்த வெள்ளம் இப்போது வந்த வெள்ளம் இரண்டிற்கும் பெரும் மாற்றம் சென்னையில் சுரங்க ரயில் பாதை உள்ளது இப்போது. அவைகள் எப்படி இருக்கின்றன என்று ஒரு செய்தியும் வருவதில்லை அவைகள் பாதுகாப்பாக உள்ளது அல்லது பிரச்சனை உள்ளது என்று ஒரு செய்தி வந்தால் நன்றாக இருக்கும்
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
11-நவ-202109:15:35 IST Report Abuse
 N.Purushothaman கழிவு நீரும் மழை நீரும் கலந்துள்ளதால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டினால் மிகப்பெரிய அளவில் தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது ....
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
11-நவ-202108:45:31 IST Report Abuse
elakkumanan மக்கள் கவனமா இருங்க.. இன்னும் எந்த எந்த தெருவில் முதல்வர் வந்து போட்டோ எடுக்கலைனு அரசு அறிவித்துள்ள போனில் சொன்னா, உடனே வந்து போட்டோ எடுத்து நம்ம மீடியாவில் வெளியிட்டு மக்கள் பனி செய்ய வசதியா இருக்கும்.. மக்களும் பொறுப்பை உணர்ந்து செயல்படனும்... ஒட்டு விற்று , காசு வாங்கினவுடனே சனநாயக கடமை முடிஞ்சதாக நினைத்து விடக்கூடாது.. கமெண்ட் போட்டு காசு வாங்கலாம்.. போட்டோவுக்கு போஸ் கொடுக்கலாம்..போனில் பேசி பாராட்டலாம்.. எவ்வளவோ இருக்கு.. குறைகள் மற்றும் கண்டனங்களை சொல்லி அரசியல் செய்வோர்க்கு இந்த பிச்சை அரசு வாய்ப்பு தராது.. குறை மற்றும் கண்டனம் சொல்லி அரசியல் செய்ய நினைப்போருக்கு பிரியாணி அண்டா டீம் மற்றும் ஓசி சோறு டீம் தக்க பதில் தர தகுந்த ஏற்பாடுகள் செய்ய பட்டிருக்கு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X