பொது செய்தி

தமிழ்நாடு

விடிய விடிய கொட்டி தீர்க்கும் மழை

Added : நவ 11, 2021
Share
Advertisement
கடலுார்-'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள கடலுார் மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டி தீர்ப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை கொட்டி தீர்த்து வருகிறது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 7 செ.மீ., மழை பதிவாகியுள்ள நிலையில், அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 12.8 செ.மீ.,

கடலுார்-'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள கடலுார் மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டி தீர்ப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடலுார் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை கொட்டி தீர்த்து வருகிறது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 7 செ.மீ., மழை பதிவாகியுள்ள நிலையில், அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 12.8 செ.மீ., காட்டுமன்னார்கோவில் மற்றும் அண்ணாமலை நகரில் 12 செ.மீ., மழை பெய்துள்ளது.இதனால் மாவட்டம் முழுவதும் குடியிருப்பு பகுதிகள், விவசாய வயல்களில் தண்ணீர் சூழ்ந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளதால் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.குடியிருப்புகளில் சூழ்ந்த மழைநீரும் மோட்டார் பம்பு செட் மூலம் வெளியேற்றும் பணி நடக்கிறது. ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதால், கடற்கரையில் முகத்துவாரம் வெட்டி தண்ணீர் வடிய வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.6 வீடுகள் சேதம்;3 கன்றுகள் பலி: தொண்டமாநத்தம் கிராமத்தில் சுகந்தி மற்றும் அசோகன் ஆகியோரது வீடுகளின் சுவர் இடிந்து சேதமானது. அதே பகுதியை சேர்ந்த தனலட்சுமி, பன்னீர்செல்வம் ஆகியோரது 2 கன்று குட்டிகள் இறந்தன.வள்ளிக்காரைக்காடு கிராமத்தில் அம்சவல்லி, அன்னவல்லியை சேர்ந்த இந்திரா, கோதண்டராமபுரத்தில் நாகப்பன், சந்திரலேகா ஆகியோரது வீடுகள் சேதமானது.அண்ணவல்லி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவரின் 8 மாத கன்றுக்குட்டி இறந்தது.கடலுார் மாவட்டத்தில் இதுவரை 462 குடிசை வீடுகள், 78 ஓட்டு வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X