சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொடர் கன மழை எதிரொலி: 4,000 கோழி குஞ்சுகள் பலி

Added : நவ 11, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுாரில்கனமழை காரணமாக நாட்டு கோழிப் பண்ணையில் 4,000 கோழி குஞ்சுகள் இறந்தது.கடலுார், புருகீஸ்பேட்டையைச் சேர்ந்தவர் காத்தமுத்து, 55; இவர், வீட்டின் ஒரு பகுதியில் நாட்டு கோழிப் பண்ணை நடத்தி வருகிறார். நேற்று காலை அவர் வழக்கம் போல் பண்ணைக்கு சென்றார். அப்போது, கோழி குஞ்சுகள் குவியல் குவியலாக இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.தகவலறிந்த கால்நடை துறை

கடலுார்-கடலுாரில்கனமழை காரணமாக நாட்டு கோழிப் பண்ணையில் 4,000 கோழி குஞ்சுகள் இறந்தது.கடலுார், புருகீஸ்பேட்டையைச் சேர்ந்தவர் காத்தமுத்து, 55; இவர், வீட்டின் ஒரு பகுதியில் நாட்டு கோழிப் பண்ணை நடத்தி வருகிறார். நேற்று காலை அவர் வழக்கம் போல் பண்ணைக்கு சென்றார். அப்போது, கோழி குஞ்சுகள் குவியல் குவியலாக இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.தகவலறிந்த கால்நடை துறை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு இறந்த கோழி குஞ்சுகளை ஆய்வு செய்தனர்.இதில், தொடர் மழை காரணமாக 4,000 கோழி குஞ்சுகள் இறந்தது தெரிந்தது.இதுகுறித்து கால்நடை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மழைக் காலங்களில் கோழி குஞ்சுகள் வளர போதிய அளவு வெப்பம் தேவைப்படும். தற்போது, மழை பெய்து வருவதால் போதிய அளவு வெப்பம் கிடைக்கவில்லை. குளிர்ந்த காற்று வீசியதால் கோழி குஞ்சுகள் ஒன்றோடு ஒன்று உரசி இறந்தது' என்றார். காத்தமுத்து கூறுகையில், 'பிறந்து ஒரு வாரமே ஆன 4,000 கோழி குஞ்சுகள் மழை காரணமாக இறந்து, நஷ்டம் ஏற்பட்டுள்ளது.அரசு இழப்பீடு வழங்க எடுக்க வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X