பொது செய்தி

தமிழ்நாடு

தளவானுார் அணைக்கட்டு சீரமைப்பு பணி தீவிரம்

Added : நவ 11, 2021
Share
Advertisement
விழுப்புரம்-தளவானுார் அணைக்கட்டில் சேதமடைந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் நடப்பதாக, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.விழுப்புரம் மாவட்டம், தளவானுார் அணைக்கட்டில் உள்ள மண் சுவர், தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீரில், நேற்று முன்தினம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், வலதுபுற அணையின் ஷட்டர் முற்றிலும் சாய்ந்து சேதமானது. இதையடுத்து, விழுப்புரம்

விழுப்புரம்-தளவானுார் அணைக்கட்டில் சேதமடைந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் நடப்பதாக, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.விழுப்புரம் மாவட்டம், தளவானுார் அணைக்கட்டில் உள்ள மண் சுவர், தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீரில், நேற்று முன்தினம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், வலதுபுற அணையின் ஷட்டர் முற்றிலும் சாய்ந்து சேதமானது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்டம் பொதுப்பணி துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.பொதுப்பணித் துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 'சாத்தனுார் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டதால், தென்பெண்ணை ஆற்றில் நீரோட்டம் வந்து கொண்டிருக்கிறது.'இருந்த போதிலும், அணை பகுதியை முற்றிலுமாக சீரமைக்கும் வகையில், தற்போது 2,000க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள், கருங்கற்களை பதிக்கும் பணிகள் துவங்கியுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X