விழுப்புரம்-கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்ட விழுப்புரம் - மயிலாடுதுறை இடையேயான ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது.விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து தினமும், மயிலாடுதுறைக்கு காலை 6:00 மணி, மதியம் 2:45 மணி, மாலை 6:00 மணிக்கும், அதேபோல், மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்திற்கு காலை 6:00 மணி, மதியம் 2:45 மணி, மாலை 6:00 மணிக்கும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.கொரோனா ஊரடங்கையொட்டி, பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.இந்நிலையில், கொரோனா தொற்று குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அளித்த நிலையில், ஏற்கனவே ரத்தாகிய ரயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே இயக்கப்பட்டு வந்த ரயில் சேவையை மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியது.ஏற்கனவே பயணிகள் ரயிலாக தினமும் மூன்று முறை இயங்கிய ரயில் சேவை நேற்று முதல் எக்ஸ்பிரஸ் ரயிலாக தினமும் ஒருமுறை இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.அதன்படி, விழுப்புரம் ரயில் நிலையம் 3வது பிளாட்பாரத்தில் இருந்து நேற்று காலை 6:00 மணிக்கு 7 பெட்டிகளோடு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் மயிலாடுதுறைக்கு காலை 9:10 மணிக்கு சென்றடைந்தது.அதே போல், மயிலாடுதுறையில் இருந்து மாலை 6:00 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்திற்கு இரவு 9:10 மணிக்கு வந்தடைந்தது.இந்த ரயில், சேர்ந்தனுார், திருத்துறையூர், பண்ருட்டி, மேல்பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், கடலுார் துறைமுகம், ஆலப்பாக்கம், புதுசத்திரம், கிள்ளை, சிதம்பரம், கொள்ளிடம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், ஆனந்ததாண்டவபுரம் பகுதி நிறுத்தங்களில் நின்று, சென்றது.விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் ரயில் சேவை துவங்கியுள்ளதால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE