பொது செய்தி

இந்தியா

விழாக்கால மானியம் பெற ஆவணம் சமர்ப்பிக்க அவகாசம்

Added : நவ 11, 2021
Share
Advertisement
புதுச்சேரி-முன்னாள் ராணுவ வீரர்கள் விழாக்கால மானியம் பெற, உரிய ஆவணங்களை முப்படை நலத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.முப்படை நலத்துறை இயக்குநர் சந்திரகுமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரியை சேர்ந்த 60 வயது நிறைவுற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் விதவையர்களுக்கு 2020-21ம் ஆண்டிற்கான விழாக்கால

புதுச்சேரி-முன்னாள் ராணுவ வீரர்கள் விழாக்கால மானியம் பெற, உரிய ஆவணங்களை முப்படை நலத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.முப்படை நலத்துறை இயக்குநர் சந்திரகுமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரியை சேர்ந்த 60 வயது நிறைவுற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் விதவையர்களுக்கு 2020-21ம் ஆண்டிற்கான விழாக்கால மானியத் தொகை ரூ. 4000 வழங்கப்பட உள்ளது.அதற்காக, கடந்த செப். 24ம் தேதி முதல் பயனாளிகளிடம் கையொப்பம், அடையாள அட்டை பிரதி பெறப்பட்டு, விபரங்கள் சேகரிக்கப்பட்டது. வரும் 18ம் தேதி முதல் பயனாளிகள் வங்கி கணக்கில் மானிய தொகை ரூ. 4000 வரவு வைக்கப்பட உள்ளது.இதுவரை கையொப்பமிட்டு, அடையாள அட்டை பிரதி சமர்ப்பிக்காத பழைய பயனாளிகள் மற்றும் புதிதாக இந்த வருடம் 60 வயதை கடந்த பயனாளிகள், தங்கள் விபரங்களை வரும் 30ம் தேதிக்குள், புதுச்சேரி முப்படை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.காரைக்கால், மாகி, ஏனாம் மண்டல பயனாளிகள், அந்தந்த மண்டல நிர்வாக அலுவலகத்திற்கு சென்று விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X