பொது செய்தி

இந்தியா

கொரோனாவுக்கு முதியவர் பலி புதிதாக 39 பேருக்கு தொற்று

Added : நவ 11, 2021
Share
Advertisement
புதுச்சேரி-கொரோனாவால் பாதிக்கப்பட்ட முத்தியால்பேட்டை முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். புதிதாக 39 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.புதுச்சேரியில் நேற்று முன்தினம் 2714 பேருக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில், 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 1,28,302 ஆக உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் குணமான 33 பேர் உட்பட இதுவரை 1,26,167 பேர்

புதுச்சேரி-கொரோனாவால் பாதிக்கப்பட்ட முத்தியால்பேட்டை முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். புதிதாக 39 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.புதுச்சேரியில் நேற்று முன்தினம் 2714 பேருக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில், 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 1,28,302 ஆக உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் குணமான 33 பேர் உட்பட இதுவரை 1,26,167 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கோரிமேடு மார்பக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 71 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாநிலத்தில் இதுவரை 1,863 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.நேற்று 2,606 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை 7,29,840 பேருக்கு முதல் கட்ட தடுப்பூசியும், 4,14,013 பேருக்கு 2ம் கட்ட தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X