பொது செய்தி

இந்தியா

வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் மக்களுக்கு ஏ.டி.ஜி.பி., வேண்டுகோள்

Added : நவ 11, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் மிக கன மழை பெய்யும் என்பதால் இவற்றை எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு மற்றும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர் என ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன் கூறினார்.ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன், நகரப்பகுதியில் மழைநீர் சூழ்ந்த இடங்களை பார்வையிட்ட பின், நிருபர்களிடம் கூறியதாவது:வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி

புதுச்சேரி-புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் மிக கன மழை பெய்யும் என்பதால் இவற்றை எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு மற்றும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர் என ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன் கூறினார்.ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன், நகரப்பகுதியில் மழைநீர் சூழ்ந்த இடங்களை பார்வையிட்ட பின், நிருபர்களிடம் கூறியதாவது:வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழை பெய்யும் என்பதால், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.அதையொட்டி, போலீஸ், வருவாய், பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகள் சார்பில் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கன மழை காரணமாக வீடூர் அணை திறக்கப்பட்டு உள்ளதால், புதுச்சேரி பகுதிகளில் வெள்ள அபாயம் உள்ளது. அதனால், மழை நீர்வரத்து வாய்க்கால் மற்றும் உப்பனாறு கரை பகுதிகளில் குடியிருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் ஐ.ஆர்.பி., (இந்திய ரிசர்வ் பட்டாலியன்) போலீசார் சேர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.பேரிடர் மேலாண்மை பயிற்சியில் தேர்ச்சி பெற்ற ஐ.ஆர்.பி.., போலீசாரை அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்பியுள்ளோம். இவர்கள் அவசர நிலைக்கு ஏற்ப உதவி செய்வர்.மிக கன மழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே வெளியில் வரவேண்டும். அரசின் நடவடிக்கைக்கு பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும். அவசர நிலை குறித்து 112, 100, 1031 ஆகிய எண்களில் போலீசாரை தொடர்பு கொள்ளலாம்.மேலும் 1070-1079 ஆகிய எண்களில் பேரிடர் மேலாண்மை குழு, மாநில அவசர நிலை குழுவை தொடர்பு கொண்டு மழை, வெள்ளம் பாதிப்பு குறித்து தகவல் தெரிவித்து உதவி பெறலாம். இவ்வாறு ஏ.டி.ஜி.பி., தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X