காரைக்காலில் 28 செ.மீ., மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு| Dinamalar

காரைக்காலில் 28 செ.மீ., மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Added : நவ 11, 2021
Share
காரைக்கால் -காரைக்கால் மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 28 செ.மீ., மழை பெய்ந்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 26ம் தேதி மழை பெய்யத் துவங்கியது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு, பகலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24

காரைக்கால் -காரைக்கால் மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 28 செ.மீ., மழை பெய்ந்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 26ம் தேதி மழை பெய்யத் துவங்கியது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு, பகலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 28 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோட்டுச்சேரி, நெடுங்காடு, திருநள்ளாறு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது.மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை மாவட்ட கலெக்டர் அர்ஜுன் சர்மா தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டனர். அதை தொடர்ந்து, மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றப் பட்டு வருகிறது பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்நிலைகளை ஆய்வு செய்து, தடுப்பணைகளை திறந்து, உபரி நீரை வெளியேற்றி வருகின்றனர்.அரக்கோணத்தில் இருந்து கமாண்டர் ஸ்ரீவத்ஸவா தலைமையில் 18 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று காரைக்கால் வந்தனர். கலெக்டர் அர்ஜுன் சர்மாவை சந்தித்து, மழை பாதிப்புகள் குறித்து ஆலோசனை கேட்டறிந்தனர்.தொடர்ந்து, விழிதியூர் காவலர் குடியிருப்பில் விழும் நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்றினர். தாழ்வான பகுதியில் உள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.போலீஸ் எஸ்.பி.,கள் வீரவல்லவன், ரகுநாயகம் தலைமையிலான போலீசார் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழையால் சாலைகள் சேதம் அடைந்துள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குளம், கன மழையால் நிரம்பியது. விருந்தினர் தங்கும் அறைக்கு செல்லும் பாதையை மழைநீர் சூழ்ந்தது. மழைநீரை வெளியேற்றும் பணி நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X