பொது செய்தி

தமிழ்நாடு

காது கேட்காத மகன்; இப்போது ஐ.ஏ.எஸ்., அதிகாரி!

Updated : நவ 11, 2021 | Added : நவ 11, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
காது கேட்காத மாற்றுத்திறனாளி மகனுக்கு, பிறர் பேசுவதை உணர வைத்து, நன்றாக பேச வைத்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற வைத்துள்ள, ஈரோட்டைச் சேர்ந்த தாய் அமிர்தவள்ளி:என் மகன் ரஞ்சித்துக்கு சிறிது பேச வரும் என்றாலும், காது கேட்காது என்பதை, அவன் பிறந்து ஏழு மாதங்கள் கழித்து தான் எங்களுக்கு தெரிந்தது. சிறப்பு மருத்துவரிடம் காண்பித்த போது, 'காது கேளாதவர்களுக்கு பேச


காது கேட்காத மாற்றுத்திறனாளி மகனுக்கு, பிறர் பேசுவதை உணர வைத்து, நன்றாக பேச வைத்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற வைத்துள்ள, ஈரோட்டைச் சேர்ந்த தாய் அமிர்தவள்ளி:latest tamil news


என் மகன் ரஞ்சித்துக்கு சிறிது பேச வரும் என்றாலும், காது கேட்காது என்பதை, அவன் பிறந்து ஏழு மாதங்கள் கழித்து தான் எங்களுக்கு தெரிந்தது. சிறப்பு மருத்துவரிடம் காண்பித்த போது, 'காது கேளாதவர்களுக்கு பேச பயிற்சி தரும் சிறப்பு பள்ளியில் சேருங்கள்' என்றார்.

அதற்கான பள்ளியை, நாகர்கோவிலில் கிறிஸ்டோபர் என்பவர் நடத்தி வருகிறார் என்பதை கேள்விப்பட்டு அங்கு சென்றோம். கிறிஸ்டோபர், லண்டனில் பயிற்சி பெற்றவர். 'பிறர் பேசும்போது உதடுகளின் அசைவை வைத்து, அவர்கள் என்ன பேசுகின்றனர் என்பதை புரிந்து, காது கேட்கும் சக்தி இல்லாதவர்களால் பேசவும் முடியும்' என்றார்.

அதன் பிறகு தான் காது கேளாதவர்களும் பேசலாம் என்பதை உணர்ந்தேன். என் மகனை பேச வைக்கும் முறைகளை, கிறிஸ்டோபர் எனக்கு பயிற்சி அளித்தார். அதற்காக, காது கேளாதோரை பேச வைக்கும் படிப்பில், பி.எட்., முடித்தேன்.


latest tamil news


அதே சமயம், கோவையில் தனியார் சர்க்கரை ஆலை நிறுவனத்தினர், 'கஸ்துார்பா காந்தி காது கேளாதோர் வாய்மொழி பயிற்சி பள்ளி'யை துவங்கினர். எனக்கு அந்த பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்தது. மகனையும் அதே பள்ளியில் சேர்த்தேன்.

'அ' என்று நான் உரக்க சொல்லுகையில், தொண்டையில் ஏற்படும் அதிர்வுகளை ரஞ்சித்தை தொட்டு உணரச் செய்து, எப்படி ஒலி உருவாகிறது என்பதை புரிந்து கொள்ள வைத்தேன். ஒற்றை எழுத்துக்களுக்கு பின் வார்த்தைகளை கற்றுக் கொடுத்தேன். பலமுறை உச்சரித்து பயிற்றுவித்தேன்.

அவன் பேசும் போதும், எழுதும் போதும், ஆரம்பத்தில் தப்பும் தவறுமாக தான் இருந்தது. அதை பொறுமையாக சரி செய்து, அவனை செதுக்கினேன். எந்தப் பொருள் எங்கு கிடைக்கும் என்று கடைகளுக்கு அழைத்து சென்று பொறுமையாக அவனுக்கு சொல்லித் தருவேன்.

ஊர்களுக்கு செல்லும் போது வழியில் வரும் ஊர்கள், குளம், மரங்கள், வயல், பயிர் என்று விளக்கிக் கொண்டே போவேன்.தனியார் தொழில்நுட்ப கல்லுாரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்தான்.

ஐ.ஏ.எஸ்., தேர்வையும் தமிழில் தான் எழுதினான். டில்லியில் நடந்த நேர்முக தேர்வுக்கு தனியாக சென்று வந்தான்; தற்போது நன்றாக பேசுகிறான். வரும் டிசம்பரில் ஐ.ஏ.எஸ்., பயிற்சி துவங்குகிறது. ஹிந்தி தெரியாது; ஆனால், அதை அவன் சமாளித்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அவனுக்கும், எனக்கும் நிறையவே இருக்கிறது!

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vijay - coimbatore,இந்தியா
15-நவ-202113:52:12 IST Report Abuse
vijay நன்றி அம்மா
Rate this:
Cancel
11-நவ-202118:27:29 IST Report Abuse
சம்பத் குமார் 1).அம்மா உங்களுக்கு தலை வணங்குகிறோம் .‌ தங்களது தாய்மை போற்றத்தக்கது.2).மனமார்ந்த வாழ்த்துகள் திரு ரஞ்சித் ஐயா அவர்களுக்கு. மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்ற பழமொழிக்கு சிறந்த உதாரணம் நீங்கள்.‌ 3). வாழ்கையில் மென்மேலும் சிறக்க அந்த ஈசன் உங்களுடன் துணை இருப்பார். 4). வரும் காலத்தில் உங்களது அண்ணன் திரு அண்ணாமலை EX IPS போல் தமிழ்நாடு சிங்கமாக வலம்வர நெஞ்சார்ந்த பாராட்டுகள். நன்றி வணக்கம் ஐயா.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
11-நவ-202115:10:51 IST Report Abuse
Rasheel தாயை போல வரூமா? கண்ணீருடன் எழுதுகிறேன். வணக்கம் அம்மா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X